வான்வழி ட்ரோன் ட்ரோன் உளவு பார்க்கும் செயற்பாட்டால் இழக்கப்படும் தனியுரிமை

0
Ivory Agency Sri Lanka

தொற்றுநோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், உளவு பார்க்க இலங்கை பாதுகாப்பு படையினரால் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட ட்ரோன்களும் அதிக சக்தி வாய்ந்த ஜெட் விமானங்களும், தனிநபரின் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக, ஆறு மாதங்களுக்கு முன்னர், உலகின் வளர்ச்சியடைந்த நாடு ஒன்றின் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட ஒரு செயற்பாடு என தெரியவந்துள்ளது.

கொரோனா அச்சத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களைத் கண்டறிவதற்கு, இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப்படைகளும் பொலிஸாரும் ட்ரோன்களைப் பயன்படுத்தி சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள செயற்பாட்டை, பிரான்ஸ் நீதிமன்றம் இந்த விடயமானது மனிதர்களின் தனியுரிமையை மீறும் செயல் அறிவித்திருந்தது.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறுபவர்களை அடையாளம் காணும் முயற்சியில், இலங்கை பொலிஸார், விமானப்படையின் உதவியுடன், நவம்பர் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை ட்ரோன்களை பறக்கவிட்டது. அதே நாளில் ஆளில்லா இலகுரக விமான ரெஜிமென்ட்டை நிறுவுவதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.

இலங்கை இராணுவத்தின் அறிவித்தலுக்கு அமைய, ட்ரோன் ஊடான கண்காணிப்பு நடவடிக்கைகள் “இராணுவ மற்றும் இராணுவம் அல்லாத கண்காணிப்பை” நோக்கமாகக் கொண்டுள்ளன.

முக்கியமான தகவல்களை சேகரிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்பதை இராணுவம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

“தேசிய பாதுகாப்புத் தேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தின் ‘எதிர்கால உபாயங்கள் 2020-2025ற்கு இணங்க, புதிய தொழில்நுட்ப சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இராணுவத்தைத் தயார்படுத்த இந்த தனித்துவமான படைப்பிரிவை கடமையில் ஈடுபடுத்துவதன் மூலம்” முக்கியமான தகவல்களை சேகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

ட்ரோன்களைப் பயன்படுத்தி முதலாவது நடவடிக்கையாக, தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது

நாட்டை ”முடக்கும்” சட்டத்தை மக்கள் பின்பற்றுகின்றார்களா என்பதை கண்காணிக்க, ட்ரோன்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், இது மனிதர்களின் தனியுரிமையை பாதிக்கும் விடயம் எனவும், கடந்த மே மாதம், பிரான்சின் உயர் நிர்வாக நீதிமன்றம், தீர்ப்பளித்தது.

மார்ச் மாத ஆரம்பத்தில், தொற்றுநோயை எதிர்கொண்டு சமூக இடைவெளி ஆலோசனையை மீறிய நபர்களைக் கண்டறிய பிரான்ஸ் கமராக்கள் கொண்ட ட்ரோன்களைப் பயன்படுத்தியது. மனித உரிமைக் குழுக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உளவு பார்ப்பதற்கு எதிராக இந்த தீர்ப்பை வழங்கியது.

மக்களை அடையாளம் காண ட்ரோன்கள் பயன்படுத்தப்படமாட்டாது, எனினும் முடக்க நடவடிக்கைகளை செயற்படுத்தவும் பெரிய கூட்டங்களைக் கலைக்கவும், பொதுக் கூட்டங்களை அடையாளம் காணவும் மாத்திரமே பயன்படுத்தப்படும் எனவும் பிரான்ஸ் அரசாங்கம் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.

ட்ரோன் கமராவிலிருந்து பெறப்பட்ட படங்கள் அந்த நேரத்தில் கட்டளை மையத்திற்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர், மேலும், ட்ரோன் ஒலிபெருக்கி மூலம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு செய்திகளை அனுப்புவது போன்ற தீர்மானங்களை மேற்கொள்ள முடிந்தது எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனிநபர் வாழ்க்கையை மதிக்கும் உரிமை மீதான சட்டவிரோத தாக்குதல்

இதற்கு பதிலளித்த பிரான்ஸ் நீதிமன்றம், ட்ரோன்களில் மக்களிடமிருந்து தனிப்பட்ட தரவுகளை சேகரிப்பதைத் தடுக்கும் தொழில்நுட்பம் இல்லையெனவும், ஏனெனில் அவை பெரிதாக்கவும் தேவைப்பட்டால் 80 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் பறக்கவும் முடியும் எனவும் தீர்ப்பளித்தது.

அதிகாரிகளால் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவது தொடர்பில் ஏப்ரல் 2016 ஐரோப்பிய ஒன்றிய அறிவித்தலின் அடிப்படையில், இந்த செயன்முறையின் ஒரு பகுதியாக சேகரிக்கப்பட்ட தரவு தனிப்பட்ட தரவுகளாக கருதப்பட வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, தரவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், “தரவு பாதுகாப்புக்கான தேசிய ஆணைக்குழுவின் (பிரிவு 31) பகுத்தறிவு மற்றும் பொதுக் கருத்தின்படி”, அத்தகைய தரவுகளைப் பயன்படுத்துவதற்கான அதிகாரம் அமைச்சர் அல்லது அமைச்சர்களின் உத்தரவுக்குப் பின்னரே வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் மேலும் கூறியுள்ளது.

அத்தகைய தரவைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அங்கீகாரம் இல்லாத நிலையில், பிரான்ஸ் நீதிமன்றம், அரசாங்கத்தின் சார்பாக இத்தகைய தரவுகளை செயலாக்குவது “வாழ்க்கைக்கான உரிமையை மதிக்கும் உரிமை மீதான சட்டவிரோத தாக்குதல்” என தீர்ப்பளித்துள்ளது.


இலங்கையில் ட்ரோன்களின் நைட் விஷன்

தொற்றுநோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பி.சி.ஆர் இயந்திரங்கள் மற்றும் படுக்கைகள் உள்ளிட்ட உபகரணங்களுக்கு செலவு செய்வதற்குப் பதிலாக உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு கமராக்களில் முதலீடு செய்வது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவது தனியுரிமை, நெறிமுறைகள், தரவு வைத்திருத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட கட்டமைப்பு உள்ளிட்ட பல சிக்கல்களை ஏற்படுத்துவதாக நியூசிலாந்தின் ஒடாகா பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பட்டப்படிப்பு மாணவி சஞ்சனா ஹத்தோடுவ வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியை தொடர்பவரும், இலங்கை ஊடகவியலாளர்களுக்கு ட்ரோன் கமரா தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருந்தவருமான அமந்த பெரேரா, சீனாவின் முன்மாதிரியை இலங்கை பின்பற்றுவதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னோடி தனியுரிமை, தரவு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த கவலைகள் போன்ற விடயங்களில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அவர் எச்சரிக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவல், போர் சூழ்நிலைகள், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள், சிறப்பு அவசரநிலைகள் மற்றும் தொற்றுநோய் பரவுதல் போன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த இராணுவத்தின் ‘எதிர்கால உத்திகளுடன்’ கைகோர்த்து செயல்படுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமென, இராணுவத்தின் ஆளில்லா வான்வழி ரெஜிமென்ட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பாதுகாப்புப் படைத் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

புதிய ட்ரோன் ரெஜிமென்ட் படை, அச்சுறுத்தல்களின் செயற்பாட்டு நிலை கண்காணிப்பு, துல்லியமான இலக்கை உறுதிப்படுத்தல், போருக்குப் பிந்தைய சேத மதிப்பீட்டு திறன்கள், பேரழிவை தணிக்கும் முயற்சிகள் மற்றும் தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாதைகளில்

ட்ரோன்கள் பெரும்பாலும் அரசாங்க எதிர்ப்பு சந்தேகநபர்களுக்கு எதிரான ஆயுதமாக, ஒரு தேடல் கருவியாக அல்லது உணவு விநியோக முகவராக உலகளவில் பயன்படுத்தப்பட்டாலும், கொரோனா வைரஸ் பரவலில் இது ஒரு புதிய பாத்திரத்தை வகிக்கிறது.

இலங்கைப் போரின் போது, ‘கெலாமா’ என அழைக்கப்படும் ட்ரோன் ”ஹைடெக் ட்ரோன்கள் தளபதிகளின் இயக்கக் கலங்களுக்கு தரை கட்டுப்பாட்டு காட்சிகளை வழங்கின, ஆனால் பொதுமக்களுக்கு எதிரான மனித-விரோத குற்றங்களைத் தடுக்க உதவியதாகத் தெரியவில்லை.

 

ருவண்டா, கானா மற்றும் சிலி போன்ற நாடுகளில், ஆபத்தான மற்றும் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் வைத்தியப் பொருட்களை வழங்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் சீனா மற்றும் இந்தியாவில் பொது இடங்களை கிருமி நீக்கம் செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு டிஜிட்டல் பேய்

எனினும், மனித உரிமை மீறல்களில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் கண்காணிப்பு திறன்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய எச்சரிக்கைகள் காணப்படுகின்றன.

“இந்த தொழில்நுட்பத்தின் அவதானிப்பு திறன்கள் சர்வாதிகாரத்தின் ஒரு டிஜிட்டல் பேயை உருவாக்குகின்றன, இதற்கமைய நமது மனித உரிமைகளை அழிக்கின்றன” என வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் நீதி நிறுவனத்தின் செனட்டர் ஜோர்ஜ் ஜே. மிச்செலின் ஆராய்ச்சி உதவியாளர் பிரிஜிட் ஸ்கிப்பர்ஸ் கூறுகிறார்.

மனித உரிமைகள் மீது ட்ரோன்களின் நீண்டகால தாக்கத்தையும் அவை தொடர்ந்து பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் மதிப்பிடுவது முக்கியம் என அவர் மேலும் கூறினார்.

“இது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை, ஏனெனில் இது சுகாதார காரணங்களுக்காக தவிர வேறு காரணங்களுக்காக சுகாதார சட்ட அமுலாக்க நிறுவனங்களால் பயன்படுத்தப்படலாம்.”

அச்சுறுத்தல் மற்றும் சங்கடம்

கிரேக்க தலைநகரான எதென்ஸில் உள்ள கடலோர அதிகாரிகள், பொது மக்களின் இடைவெளிளை பற்றிய வழிகாட்டுதல்களை வழங்க ஒலிபெருக்கிகள் கொண்ட ட்ரோன்கள் பயன்படுத்துகின்றனர்.

எனினும் சில பகுதிகளில், வாய்மொழி எச்சரிக்கைகளை வெளியிடுவதற்கும், சமூக தொலைதூர சட்டங்களை மீறும் அல்லது முகக்கவசவம் அணியாதவர்களை பகிரங்கமாக சங்கடப்படுத்துவதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, மேலும் இதுபோன்ற செயற்பாடு ஒரு வகையான அச்சுறுத்தல் மற்றும் மரியாதை மீறல் எனபர்கிட் ஸ்கிப்பர்ஸ் கூறுகிறார்.

இந்த தொற்றுநோய்களின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்த பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் முறையானவை, அவசியமானவை, விகிதாசார மற்றும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும், மேலும் அவை வலுவான மற்றும் சுயாதீனமான நெறிமுறை மதிப்புரைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும், அத்துடன் மனித உரிமைகள் தாக்கங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இல்லையெனில், எதிர்காலத்தில் ட்ரோன்கள் ஒரு கடுமையான தேடல் அமைப்பின் முக்கிய அங்கமாக மாறக்கூடும் என பர்கிட் ஸ்கிப்பர்ஸ் எச்சரிக்கிறார்.

Facebook Comments