துர்நாற்றம் வீசும் சடலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இலங்கையில் இந்திய இராணுவத்தின் குற்றங்கள் குறித்த அறிக்கை!

0
Ivory Agency Sri Lanka

 

எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைகளால் 35 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் பிழைத்தவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து சர்வதேச மனித உரிமை சட்டத்தரணி தலைமையிலான அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய அறிக்கை வடக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளைக் கண்டறிந்து, அவர்களை பொறுப்புக்கூறச் செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு இழப்பீடு வழங்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்வதாக தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் (ITJP) இன்றைய தினம் (மார்ச் 2) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“இறந்த சடலங்களின் துர்நாற்றமும், எரிந்த மணமும் கலைந்து போவதற்கு முன்னரே, உயிர்தப்பியவர்களிடமிருந்து வாக்குமூலங்களை கவனமாகப் பதிவுசெய்து, ஆவணப்படுத்திய தனியொருவரின் அசாதாரண செயற்பாடே இவ்வறிக்கை உருவாகுவதைச் சாத்தியமாகியது.” என “வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்” என்ற தலைப்பிலான 62 பக்க அறிக்கை குறித்துசர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் ஜஸ்மின் சூகா தெரிவிக்கின்றார்.

“அநியாயங்கள் நடைபெறும்போதே அவற்றை ஆவணப்படுத்துவது எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு செய்யப்படும் முதலீடாகும் என்பதே இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாகும். மேலும், நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதற்கு பல தசாப்தங்கள்கூட எடுக்கலாம், ஆனால், இழைக்கப்பட்ட மீறல்களும் துன்பங்களும் ஆவணப்படுத்தப்படாவிட்டால், இது சாத்தியமே இல்லை.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

1989 இல், பாடசாலை அதிபராகவும், விஞ்ஞான ஆசிரியராகவும் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நடராஜா ஆனந்தராஜ் என்பவர் இப்படுகொலை நிகழ்ந்தபோது தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்திருந்தார். சடலங்களை எரித்துவிட்டு, வெறும் ஒருசில நாட்களுக்குள்ளேயே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 200 வரையான சத்தியப் பிரமாணங்களைச் சேகரிக்க ஆரம்பித்திருந்தார்.

அதன் பின்னர் அவர் இந்தியாவிற்கு சென்று வல்வெட்டித்துறையில் நடந்ததை இந்திய அரசாங்கத்திடம் தெரிவித்ததோடு, ‘வல்வைப் படுகொலை” என்னும் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். பல தசாப்தங்கள் நீடித்த போரில், அவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்டதோடு, அவர் சேகரித்த சத்தியப் பிரமாணங்களில் பாதிக்கும் மேல் இதில் அழிவடைந்தன.

தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி, 1990களின் இறுதியில் இலங்கையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய அமைதி காக்கும் படைகளை ‘குரங்குப் படையினர்’ என விமர்சித்திருந்தது.

வல்வெட்டித்துறைப் படுகொலைகள் தொடர்பாக சுயாதீன விசாரணையை நிறுவவும், படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை உறுதிப்படுத்தவும் இலங்கையின் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறது.

குறிப்பாக, இந்தியர்களால் இராணுவத் தளமாகப் பயன்படுத்தப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும், வல்வெட்டித்துறையிலும் பத்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் புதைகுழியை இலங்கை அகழ வேண்டும் எனவும் அந்த செயற்திட்டம் பரிந்துரைத்துள்ளது.

“இலங்கையின் வல்வெட்டித்துறையில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த படுகொலைக்கு இந்தியா முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்ற தலைப்பிலான முழுமையான ஊடக அறிக்கை கீழே 👇

ஜொகன்னஸ்பர்க்: எண்பதுகளின் இறுதியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும்
படையினரால் 35 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயர்தப்பியவர்களின்
வாக்குமூலங்களைத் தொகுத்து ITJP அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இப்படுகொலையில்
ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை இப்படுகொலைக்குப்
பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருவதுடன்
அவர்களிற்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும் இந்திய அரசாங்கத்திடம் இவ்வறிக்கை கோரிக்கை
விடுக்கின்றது. ‘ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்” என்னும் இந்த அறிக்கையானது 1989 ஓகஸ்ற்றில்
வல்வெட்டித்துறை மக்களை இலக்கு வைத்து, மூன்று நாட்கள், திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல்
தொடர்பில் விபரிக்கின்றது. இப்படுகொலையில் ஐந்து சிறுவர்கள், ஒரு குழந்தை உட்பட 60 இற்கும்
மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள்.

‘இறந்த சடலங்களின் துர்நாற்றமும், எரிந்த மணமும் கலைந்து போவதற்கு முன்னரே,
உயிர்தப்பியவர்களிடமிருந்து வாக்குமூலங்களை கவனமாகப் பதிவுசெய்து, ஆவணப்படுத்திய
தனியொருவரின் அசாதாரண செயற்பாடே இவ்வறிக்கை உருவாகுவதைச் சாத்தியமாகியது.
அநியாயங்கள் நடைபெறும்போதே அவற்றை ஆவணப்படுத்துவது எதிர்காலப் பொறுப்புக்கூறல்
செயற்பாட்டுக்கு செய்யப்படும் முதலீடாகும் என்பதே இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாகும். மேலும்,
நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதற்கு பல தசாப்தங்கள்கூட எடுக்கலாம், ஆனால், இழைக்கப்பட்ட
மீறல்களும் துன்பங்களும் ஆவணப்படுத்தப்படாவிட்டால், இது சாத்தியமே இல்லை” இவ்வாறு சர்வதேச
உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தி;ன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

பாடசாலை ஆசிரியர்

1989 இல், பாடசாலை அதிபராகவும், விஞ்ஞான ஆசிரியராகவும் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த
நடராஜா ஆனந்தராஜ் என்பவர் இப்படுகொலை நிகழ்ந்தபோது தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை
செய்யப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்திருந்தார். சடலங்களை எரித்துவிட்டு, வெறும் ஒருசில
நாட்களுக்குள்ளேயே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 200 வரையான சத்தியப் பிரமாணங்களைச்
சேகரிக்கத் தொடங்கினார். பின்னர், அவர் டெல்லிக்குச் சென்று வல்வெட்டித்துறையில் நடந்ததை இந்திய
அரசாங்கத்திடம் தெரிவித்தார், மேலும் ‘வல்வைப் படுகொலை”1 என்னும் ஒரு புத்தகத்தையும்
வெளியிட்டார். பல தசாப்தங்கள் நீடித்த போரில், அவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் பின்னர்
தீக்கிரையாக்கப்பட்டது, அவர் சேகரித்த சத்தியப் பிரமாணங்களில் பாதிக்கும் மேல் இதில்
அழிக்கப்பட்டன.

இலண்டனில் நிகழ்ந்த ஒரு தற்செயலான கண்டுபிடிப்பே இச்சம்பவத்தை மீண்டும்
கண்டறிந்துகொள்வதற்கு வழிவகுத்தது. தமிழ் தகவல் மையத்தின் காகித ஆவணங்களை டிஜிற்றல்
மயமாக்கும்போதுதான் இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.

‘எண்பதுகளின் பிற்பகுதியில், பாதுகாத்து வைக்கப்படுவதற்காக விமானத்தபால்மூலம் இலண்டனுக்கு
அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்களை நான் வாசித்துக்கொண்டிருந்தபோதுதான் ஒரு கடிதம் எனது
கவனத்தை ஈர்த்தது. இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த கப்டன் மேனன் என்பவர், ‘தன்னிலை மறந்து
செயற்பட்டதாகத் தோன்றினார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்த அக்கடிதத்தில், உள்;ர் பிரஜைகள் குழுவைச்
சேர்ந்த 12 உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர். அப்பெயரைப் பார்த்ததும், என் மனதில் பொறி
தட்டியது. இணையத்தில் தேடிப்பார்த்தபோது, அவரைப்பற்றிய பல தகவல்கள் வெளிப்பட்டன.
அக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் யாராவது இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்று
இலங்கையில் உள்ளவர்களிடம் கேட்டேன், ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு நாள்,
லண்டனில் உள்ள இளம் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களிடம் வல்வெட்டித்துறையில் இருந்து
யாராவது இருக்கிறார்களா என்று கேட்டேன், மேலும் அவர்களுக்கு அந்தக் கடிதத்தைக் காட்டினேன்.
உடனடியாவே அதிலிருந்தவர்களின் ஒருவர் வல்வெட்டித்துறையிலிருந்த தன் நண்பனின் தாத்தாவுடன்
என்னைத் தொடர்புபடுத்திவிட்டார்” இவ்வாறு இலண்டனிலுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான
செயற்திட்டத்தி;ன இயக்குனர், பிரான்ஸிஸ் ஹரிசன் கூறினார்.

பிரமாணப்பத்திரங்கள்

நடராஜா ஆனந்தராஜ் சேகரித்து வைத்த பிரமாணப்பத்திரங்கள் மூன்று நாள் படுகொலையில்
உயிர்பிழைத்தவர்களின் அனுபவப் பகிர்வினைப் பேணிப்பாதுகாக்கின்றன. வல்வெட்டித்துறை மக்கள்
தங்கள் அன்புக்குரியவர்கள் தம்முன்னே இந்திய அமைதிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில்
கொல்லப்படுவதை எவ்வாறு கண்டார்கள் என்பதை இவை விபரிக்கின்றன. காயமடைந்த பலர் உயிர்
பிழைப்பதற்காக இரத்த வெள்ளங்களில் செத்தவர்களைப் போல பாசாங்கு செய்ய வேண்டிய
கட்டாயத்தில் இருந்தனர். ஒரு வயதான மீனவர், தன் பேரன்கள் இருவர் தனது வீட்டிற்குள் ஓடி
வந்ததுபோது அவர்களை ஆரத்தழுவியதையும், ஆனால், அவர்களின் தாய் வீட்டிற்கு மார்பிலிருந்து
இரத்தம் கொட்டியபடி ஓடிவந்து, தனது காலடியில் விழுந்து இறந்ததையும் விபரிக்கின்றார். அவள் சில
ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் தனது கணவனைப் பறிகொடுத்து,
விதவையாகியிருந்தாள். மற்றொரு சம்பவத்தில், இந்திய சிப்பாய்கள் இரண்டு சகோதரர்களை
அவர்களின் வீட்டிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர், அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
அவர்களின் மனைவிகள் அவர்களை கட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் அவர்கள்மீது
துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பெண்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

அந்நேரத்தில் வெளிநாட்டில் வாழ்ந்த திரு. சிவகணேஷனின் வீட்டிற்குள் இந்தியப் படைகள்
உள்நுழைந்தபோது, அங்கு தஞ்சம் புகுந்திருந்த பெண்கள் சிப்பாய்களின் கால்களில் விழுந்து, தங்களைச்
சுட வேண்டாம் என்று கெஞ்சினர். ஆனால் படையினரோ அவர்களை உதைந்து தள்ளிவிட்டனர். 60

Facebook Comments