காணாமல்போன தனது கணவருக்கு நீதி கோரும் பொது மக்களின் போராட்டங்களால் மட்டுமே நீதிக்கான பொறிமுறையை வலுப்படுத்த முடியும் என சர்வதேச விருது பெற்ற மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கூறுகிறார்.
“நீதி புத்துயிர் பெற, சட்ட புத்தகங்களில் உள்ள சட்டங்களை புதுப்பிக்கும் வலிமை, எங்கள் வலிமையான போராட்டத்தின் பலத்திலேயே உள்ளது.”
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுகாணாமல் ஆக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த விடயத்தை முன்னிட்டு www.ekneligodaforum.org என்ற பெயரில் இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 25, 2021 திங்கள், மாலை 4 முதல் 6 மணிவரை, பொரளை, டொக்டர் என்.எம் பெரேரா அரங்கில் இணையதள அங்குரார்ப்பண நிகழ்வு, “அந்த மனித முன்னோடியை எங்களிடமிருந்து பிரித்து 11 வருடங்கள் ஆகின்றன” என்ற தொனிப்பொருளில் எக்னலிகொட மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
தனது கணவருக்கான நீதிக்கான போராட்டத்தில் ஒரு முன்னுதாரண மாற்றம் இதுவென தெரிவித்த சந்தியா எக்னெலிகொட, 11 வருடங்களாக தொடரும் தன்னுடைய நீதிக்காக போராட்டத்திற்கு பலத்தையும் தைரியத்தையும்ம தரும் சிவில் சமூக மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
நாட்டில் தொற்றுநோய் நிலைமை காரணமாக நீதித்துறை செயன்முறை ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், நீதித்துறையின் கட்டமைப்பு நாளை மாற்றமடையக்கூடும் என தான் அஞ்சுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராஜபக்சக்கள் பிரகீத் எக்னெலிகொடவை அழித்திருந்தாலும், அவரது எண்ணங்கள் அவரது இரண்டு பிள்ளைகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட வலியுறுத்தியுள்ளார்.
“இந்த நாட்டில் நீதியை தேடும் மக்களுக்காகவும், சட்டத்தின் ஆட்சிக்காகவும், இந்த நாட்டின் போராட்டத்துக்காகவும், சிறந்த நாட்டை கட்டியெழுப்பவும்.” பதினொரு வருடங்களாக தனக்கு ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் சந்தியா எக்னெலிகொட நன்றி தெரிவித்தார்.
கடந்த 11 வருடங்களாக காணாமல் போயுள்ளஎக்னெலிகொடவிற்கு நீதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தான் முனனெடுத்த அனைத்து முயற்சிகள் மற்றும் செயற்பாடுகளையும், பிரகீம் இலங்கையில் இருந்த காலத்தில் எழுதிய கட்டுரைகள், வரைந்த ஓவியங்கள் என அனைத்தையும் சேர்த்து இந்தஇணையதளத்தை உருவாக்கியுள்ளதாக பிரகீத்எக்னெலிகொடவின் மனைவியும், சர்வதேச அளவில்புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலருமான சந்தியாஎக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணாமல் போன சிங்கள, தமிழர்கள்மற்றும் முஸ்லிம்கள் பற்றிய தகவல்களும்இணையதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சந்தியாஎக்னலிகோடா மேலும் குறிப்பிடுகிறார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010 அன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டார்.
இலங்கையில் போரின்போதும் காணாமல் போனஆயிரக்கணக்கான உறவினர்கள் மற்றும் மோதலுக்கு முன்னரான கலவரங்களின் போதும் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் அடையாளமாக மாறியபெண்ணான சந்தியா எக்னெலிகொடவுக்கு 2017ஆம்ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவினால் சர்வதேச வீரதீர பெண் விருது வழங்கப்பட்டது.
காணாமற்போன தனது கணவர் பிகீத் எக்னெலிகொட பற்றிய உண்மையை வெளிப்படுத்த அதிகாரிகள்தடையாக இருந்தபோதிலும், 80 தடவைகளுக்கு மேல்நீதிமன்றத்திற்கு செல்வதில் அவர் காட்டிய தைரியம்காரணமாகவே அவர் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டதாக அமெரிக்க உதவி வெளிவிவகார செயலாளர் தோமஸ் ஏ செனொன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதியை தேடுடிய பயணம்
தனது கணவருக்கு நீதி தேடுவதற்காக கடந்த பத்து ஆண்டுகளில் எக்னெலிகொட எவ்வளவு தூரம் பயணம் செய்தார் என்பதைக் கணக்கிட்டு மாற்றம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாற்றத்தின் ஆசிரியர், செல்வராஜ ராஜசேகரின் கருத்திற்கு அமைய, சந்தியா எக்னெலிகொட கடந்த 10 ஆண்டுகளில் 411,220 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்துள்ளார்.
இதற்கமைய நீதிமன்றங்கள் (ஹோமாகம நீதவான் நீதிமன்றம், அவிசாவளை நீதவான் நீதிமன்றம், கொழும்பு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்) மற்றும் அரச நிறுவனங்கள் (பொலிஸ் நிலையங்கள், இராணுவ தலைமையகம், சிஐடி, மனித உரிமைகள் ஆணைக்குழு) ஊடக சந்திப்புகள், ஆர்ப்பாட்டங்கள், கண்காட்சிகள், மத ஸ்தானங்கள். வெளிநாட்டு பயணங்கள், (மனித உரிமைகள் ஆணைக்குழு, கண்காட்சிகள், விருதுகள்) என பயணித்த தூரம் கணக்கிடப்பட்டுள்ளது.