ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்து கருத்துக் கோரல்

0
Ivory Agency Sri Lanka

அரச சேவையில் ஓய்வு பெறும் வயதை மேலும் பத்து வருடங்கள் நீடிக்க நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர் பசில் ராஜபக்வினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு, முறையான விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு அரசாங்கத்திடம் அறிக்கை சமர்பிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

அறிக்கை தயாரிக்கும் போது, ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள குழு தீர்மானித்துள்ளதாக, ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் பதுல ஸ்ரீ ரோஹன டி சில்வா மற்றும் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் செயலாளர் பிரதீப் லக்சாந்த ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் [email protected] என் மின்னஞ்சல் ஊடாக நவம்பர் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் ஐந்து உறுப்பினர்களின் பெயர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

நவம்பர் 12ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரச சேவையில் ஓய்வுபெறும் வயதை 65 ஆக நீட்டிக்க முன்மொழியப்பட்டது.

Facebook Comments