ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வணிகத்திற்காக சொத்துக்களை விற்கிறது

0
Ivory Agency Sri Lanka

நாளுக்கு நாள் கேட்பவர்களிடமிருந்து விலகிச் செல்லும் அரச வானொலி, தனது வளங்களை வேறு முதலீடுகளுக்குப் பயன்படுத்த தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, திருகோணமலையில் குச்சவெளி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணியில், முன்னர் ஜேர்மன் குரல் வானொலி இயங்கி வந்த இடத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

திருகோணமலை, குச்சிவெளியில் 250 ஹெக்டேர் நிலத்தை சூரிய சக்தி மின்னுற்பத்தி செய்ய பயன்படுத்த தீர்மானித்துள்ளோம். இந்த நிலம் 1980இல் ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தப்பட்டது. ஜேர்மன் குரல் வானொலியை இயக்கும் வாய்ப்பு ஜேர்மன் குடியரசுக்கு வழங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்த பின்னரும் காணி வானொலி நிலையத்திற்கு மீளக் கொடுக்கப்பட்ட போதிலும், காணி இன்னும் வெறுமனே காணப்படுவதாக என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சரவை தீர்மானத்தின் போது அறிவித்துள்ளார்.

ஜனவரி 19 காலை கொழும்பில் உள்ள தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்துகொள்ளும் என தெரிவித்தார்.

“குச்சவெளி சூரிய சக்தி திட்டம் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை முதலீட்டாளர்கள் ஊடாக ஆரம்பிக்கப்படும்.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” என அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.

இதன் மூலம் 80 முதல் 100 மெகாவொட் திறன் கொண்ட சூரிய சக்தி உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

அரசியல் மயப்படுத்தல், தனியார் வானொலிச் சேவைகளின் ஆரம்பம், நிர்வாகக் குறைபாடுகள் போன்றவற்றால் நாளுக்கு நாள் நட்டமடைந்து வரும் அரச நிறுவனங்களின் பட்டியலில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) ஆசியாவின் வானொலித் துறையில் நீண்ட வரலாற்றைக் கொண்ட பிரித்தானியர்களால் ‘ரேடியோ சிலோன்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

1953ஆம் ஆண்டு டென்சின் நோர்கேயுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் நபராக வரலாற்றில் இடம்பிடித்த எட்மண்ட் ஹிலாரி மலை உச்சியில் கேட்கக்கூடிய ஒரே வானொலி நிலையமாக ரேடியோ சிலோன் பதிவாகியது.

Facebook Comments