அரசின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக இலங்கையில் நீதியை நிலைநாட்டுவது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
“இலங்கை நீதித்துறையில் எனக்கு கசப்பான அனுபவம் உள்ளது” என நெதர்லாந்தின் ஹேக் நகரில் இடம்பெறும், இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச தீர்ப்பாயத்தில் இடம்பெறும் விசாரணையில் சாட்சியமளித்த, உலகப் புகழ்பெற்ற மனித உரிமைச் செயற்பாட்டாளரான சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
“பிரகீத் வழக்கில் தொடர்புடைய நீதிபதிகளில் ஒருவர் இராணுவ பிரிகேடியர். அவர் இன்னும் பணியாற்றுகிறாரா என்று இராணுவ சட்டப் பிரிவிடம் கேட்டேன். இன்று வரை எனக்கு பதில் கிடைக்கவில்லை.”
எக்னலிகொட மற்றும் ஊடகவியலாளர் தில்ருக்ஷி ஹந்துன்நெத்தி ஆகியோர் இன்று மாலை ஹேக்கில் உள்ள இலங்கை ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாவது நாளான இன்று மாலை சாட்சியமளித்தனர்.
முதலாவது ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மீதான வழக்கு விசாரணை நேற்று நெதர்லாந்தின் ஹேக் நகரில், ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தில் ஆரம்பமானது.
இந்த வழக்கு விசாரணை இலங்கை நேரப்படி இன்று மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
இதை https://ptmurderofjournalists.org/sri-lanka-case-hearing-on-the-murder-of-journalist-lasantha-wickrematunge/ இல் நேரடியாகப் பார்க்கலாம்.
தீர்ப்பாயத்தின் முதல் நாள் உரையாற்றிய இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் (jds) ஏற்பாட்டாளர் ரோஹித பாஷன அபேவர்தன, 2004 முதல் 2010 வரை நாட்டில் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களின் விபரங்களைத் வெளியிட்டார்.
ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மாத்திரமன்றி, அரசுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் நீதித்துறை ஒருபோதும் சாதகமாக நடந்து கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் இலங்கை அரசுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என தீர்ப்பாயத்தால் அழைக்கப்பட்டுள்ள, ப்ரீ பிரஸ் அன்லிமிடெட் (FPU), ஊடகவியலாளர்களை பாதுகாப்புக் குழு (CPJ)மற்றும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (RSF) ஆகியன கூறுகின்றன.
லசந்த விக்ரமதுங்கவை மரணத்திலிருந்து காப்பாற்றத் தவறியதன் மூலம் அவரது மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்புவிசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் சாக்குப்போக்கு கூற இலங்கை அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்த அரசின் பதில் எதுவும் வெளியாகவில்லை.