லசந்த கொலை வழக்கு விசாரணை ஹேக் நகரில் இன்று

0
Ivory Agency Sri Lanka

தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது முதலாவது ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு விசாரணை, ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தில் (The People’s Tribunal on the Murder of Journalists) இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்றும் நாளையும் இலங்கை நேரப்படி பிற்பகல் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு இலங்கை ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பான நிபுணத்துவ சாட்சியங்களை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் (JDS) ஒருங்கிணைப்பாளர் ரோஹித பாஷன அபேவர்தன வழங்க உள்ளார்.

இதனை https://www.youtube.com/watch?v=aj6WIX-1nfo&feature=emb_imp_woyt வழியாக நேரலையில் பார்க்கலாம்.

தனது தந்தையின் கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு போராடி வரும் அஹிம்சா விக்கிரமதுங்கவும் சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் இலங்கை அரசுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என தீர்ப்பாயத்தால் அழைக்கப்பட்டுள்ள, ப்ரீ பிரஸ் அன்லிமிடெட் (FPU), ஊடகவியலாளர்களை பாதுகாப்புக் குழு (CPJ)மற்றும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (RSF) ஆகியன கூறுகின்றன.

லசந்த விக்ரமதுங்கவை மரணத்திலிருந்து காப்பாற்றத் தவறியதன் மூலம் அவரது மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்புவிசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் சாக்குப்போக்கு கூற இலங்கை அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்த அரசின் பதில் எதுவும் வெளியாகவில்லை.

Facebook Comments