றுவர்களை துன்புறுத்திய பொலிஸாருக்கு தண்டனை வழங்குமாறு கோரிக்கை

0
Ivory Agency Sri Lanka

காலி முகத்திடலில் சிறுவர்களை துன்புறுத்திய பொலிஸார் மற்றும் பெண் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாட்டின் பிரபல ஆசிரியர் சங்கம் ஒன்று சிறுவர் பாதுகாப்பு பொறுப்பில் உள்ள அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒக்டோபர் 10 ஆம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்த இலங்கை ஆசிரியர் சங்கம், விடுமுறை தினத்தில் சிறுவர்கள் ஓய்வு நேரத்தை செலவிடும் இடத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கையினால் சிறுவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.

“இந்தப் பிள்ளைகள் பெற்றோருடன் காலி முகத்திடலுக்கு வந்தனர், அது மோதல்களுக்கான இடமல்ல, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் அதிகளவான மக்கள் வந்து பொழுதைக் கழிக்கும் இடம். பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கையால் அத்தகைய இடத்தின் அமைதி சீர்குலைவதால், சிறுவர்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர் மற்றும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளனர்.”

ஒக்டோபர் 9ஆம் திகதி கொழும்பின் காலி முகத்திடலில் நடைபெற்ற இறந்தவர்களின் நினைவேந்தல் மற்றும் அமைதியான போராட்டத்திற்கு இலங்கை பொலிஸார் இடையூறு விளைவித்ததாகவும், பங்கேற்பாளர்களை “கொடூரமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும், அவமானகரமான முறையிலும் நடத்தியதாக ஊடகவியலாளர்கள் அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியிருந்தது.

கடந்த ஒக்டோபர் 09ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அத்துமீறி வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் கைது செய்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஒரு வயது குழந்தையை தந்தையிடம் இருந்து பறிக்க முயன்றதால், அச்சமடைந்த குழந்தை வாந்தி உள்ளிட்ட பல உடல்நல பாதிப்பிற்கு உள்ளானதோடு, அன்று இரவே சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்றுமொரு இளம்பெண்ணின் தாயை கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் குழு முயற்சித்ததாகவும், அந்த முயற்சியில் தாயுடன் இருந்த சிறுமியை துன்புறுத்தும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டதாகவும் சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், உவிந்து ராஜபக்ச என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவனை பொலிஸார் கைதுசெய்ததுடன், தாயுடன் வந்த சிறுவன் இந்த எதிர்ப்பை காணொளி பதிவு செய்ததாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த இடத்தில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை பொலிஸார் அச்சுறுத்தி துன்புறுத்தியதாகவும் ஆசிரியர் சங்க தலைவர் குற்றம் சாட்டினார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து இந்த சம்பவத்தில் சிறுவர்களை துன்புறுத்திய செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

Facebook Comments