சிறையில் உள்ள மதகுருமார்களில் பெரும்பாலானோர் பௌத்த பிக்குகள்

0
Ivory Agency Sri Lanka

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதகுருமார்களில் பெரும்பாலானோர் பௌத்த பிக்குகள் என நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.

இந்த வரும் ஜூன் முதலாம் திகதி, 29 பௌத்த பிக்குகள் கைதிகளாகவும், 19 பேர் சந்தேகத்திற்குரியவர்களாகவும் சிறைவாசம் அனுபவிப்பதாக, நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் வெளிப்படுத்தியமைக்கு அமைய, அவர்கள் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புபட்டுள்ளன.

அவர்கள் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், பெண் பாலியல் பலாத்காரம், கொலை, பண மோசடி, கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன நேற்று (08) இந்த உருக்கமான தகவலை வெளியிட்டார்.

நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவல்களுக்கு அமைய இந்த குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதகுருமார்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

Facebook Comments