தொழிற்சங்கங்கள், மாணவர் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான சர்வதேச குரல் வலுக்கிறது

0
Ivory Agency Sri Lanka

உயர்கல்வியின் இராணுவமயமாக்கலுக்கு எதிராக போராடியமைக்காக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட இலங்கையின் கல்வி உரிமை ஆர்வலர்களுக்கு சர்வதேச ஆதரவு அதிகரித்து வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய பட்டதாரி தொழிற்சங்கத்தின் மூன்று உறுப்பினர்கள் உட்பட ஐந்து முக்கிய ஆர்வலர்கள் தங்கள் போராட்டங்களுக்காக தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட பின்னர் சுமார் இரண்டு மாதங்களாக எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் ஆர்வலர் கோஷிலா ஹன்சமாலி பெரேரா காவலில் இருந்தபோது கொரோனா தொற்றுக்கு உள்ளானார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர்களான வசந்த முதலிகே, அமில சந்தீப மற்றும் ஹேஷான் ஹர்ஷனா மற்றும் சமீர கொஸ்வத்த ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கைது செய்யப்பட்ட அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் ஆர்வலர்கள் மீதான அடக்குமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், அவர்களை உடனடியாக விடுவிக்கவும் சர்வதேச தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

ஐரோப்பிய சந்தைக்கு அணுகக்கூடிய ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை வழங்குவதற்கான சாத்தியத்தை மதிப்பிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட குழு இலங்கையில் இருந்தபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஜிஎஸ்பி சலுகை என அழைக்கப்படும் இந்த வசதி, இலங்கை மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், நல்லாட்சி மற்றும் நிலையான அபிவிருத்திக்கு பணியாற்றும் நிலைமைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

நியூசிலாந்தின் அனைத்து முக்கிய கல்வி தொழிற்சங்கங்களும் “ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக மசோதாவை எதிர்க்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்க ஆர்வலர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர” வலியுறுத்துகின்றன.

நியூசிலாந்து மூன்றாம் நிலை கல்வி சங்கம் (TEU), முதன்மை ஆசிரியர் சங்கம்,
சர்வதேச தரநிலை கல்வி முகவர்கள் (ISEA) கையெழுத்திட்ட ஒரு அறிக்கையில் விரிவுரையாளர் அமிந்த லக்மல் மற்றும் விரிவுரையாளர் மஹிம் மெண்டிஸ் ஆகியோருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர்.

“கைது செய்யப்பட்ட ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்கவும், குற்றச்சாட்டுகளை கைவிட்டு, உயர் கல்வி (KNDU மசோதா) இராணுவமயமாக்கலை எதிர்க்கும் தொழிற்சங்கங்கள், கல்வி ஊழியர்கள் மற்றும் மாணவர் ஆர்வலர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவரவும், 24 வருட தீர்க்கப்படாத ஊதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காணக் கோரி தொழிற்சங்கங்களை வேட்டையாடுவதை உடனடியாக நிறுத்தவும் நாங்கள் கோருகிறோம்.” என
பல அவுஸ்திரேலிய தொழிற்சங்கங்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியா -ஆசிய தொழிலாளர் இணைப்பு (AAWL), தொழிலாளர் ஒத்துழைப்பு, சர்வதேச தொழிலாளர் சங்கம், சோசலிஸ கூட்டணி, விக்டோரியாவின் சோசலிஸவாதிகள்
இந்த அறிக்கையில் யாரா நகர சபை உறுப்பினர் ஸ்டீவன் ஜொலி, மோர்லாந்து நகர சபை உறுப்பினரான சூ போல்டன் மற்றும் மாரிபிர்நோங்கி மேயர் ஜோர்ஜ் ஜோர்கெரா ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா தேசிய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் மோகன பராக்கிரம வீரசிங்க மற்றும் சுதந்திர கல்வி ஊழியர் சங்க உறுப்பினர் ஒருவரும் கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி தினம் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக போராட்டத்தை நடத்திய, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பல தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஜூலை மாதத்தில், விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிரான சர்வதேச ஆதரவு காரணமாக இலங்கை அரசு அவர்களை விடுவிக்க வேண்டியிருந்தது.

எனினும், பணிநிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் மீது “கடுமையான நடவடிக்கை” எடுப்பதாக பாதுகாப்பு அமைச்சர் பலமுறை அச்சுறுத்தியதால், கல்வி உரிமைக்காக போராடும் தொழிற்சங்க ஆர்வலர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

Facebook Comments