கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி ஒன்றை உருவாக்குவது குறித்து அண்மைய நாட்களில் பரவலான கருத்துகள் வெளியாகி வருகின்றன.
உலக சுகாதார ஸ்தாபனம், நாட்டிற்கு தடுப்பூசியை வழங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இதற்கு உண்மையான அறிவியல் பின்னணியை விளக்க உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் வசனங்களுடன் தடுப்பூசி போடுவது குறித்து ”விஞ்ஞானத்துடன் 5 நிமிடங்கள்” என்ற தலைப்பிலான உரையாடல், ஒன்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி வைத்தியர் சௌமியா சுவாமிநாதனின் விளக்கத்துடன் வெளியாகியுள்ளது.