சுகாதார அமைச்சின் செயலாளர் அமைச்சை மீறி செயற்படுவதை நிறுத்துமாறு கோரிக்கை (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

சுகாதார அமைச்சின் செயலாளரின் உத்தரவுகளை நிறைவேற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார சேவையின் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் புதிய சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நீங்கள் முதுகெலும்புடன் சுகாதார அமைச்சராக செயற்பட விரும்பினால், உங்களைத் தாண்டி வரும் உத்தரவுகளை அமுல்படுத்துவதிலிருந்து உடனடியாக சுகாதார செயலாளருக்கு தடை விதியுங்கள்.”

இல்லையெனில் சுகாதார சேவையில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதில் சீரான தன்மையை பேணுவது கடினம் என வைத்திய ஆய்வக விஞ்ஞானிகள் நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த சூழ்நிலையை எதிர்கொண்டதாகவும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுமாறு, கொழும்பில் (நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது தொழிற்சங்கத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இராணுவ வைத்தியப் படையின் முன்னாள் கட்டளை அதிகாரி மற்றும் இராணுவ சுகாதார சேவையின் தலைமை பணிப்பாளரான, மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ். எச். முனசிங்க சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளராக கடமையாற்றுகின்றார்.

கொடிய தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்ட விதம் அறிவியல் பூர்வமானது அல்ல எனக் குற்றம் சாட்டிய ரவி குமுதேஷ், இலங்கை அரசியல் ரீதியாக முடக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

“நாங்கள் ஒரு அறிவியல் முடக்கத்தை கேட்டோம். எங்களுக்கு அரசியல் முடக்கம் கிடைத்துள்ளது. வழங்கப்பட்டது. முடிந்தால் ஏதாவது செய்யுங்கள் என்ற ஒரு ஆச்சரியமான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.”

இதுபோன்ற சூழ்நிலையில் எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேறாது எனவும், பொறுப்பு முற்றிலும் அரசியல் சார்ந்ததல்ல எனவும் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சுக்கு இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது கடமைகளை ஒழுங்காக மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சிற்கு உத்தரவிடுமாறு, இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ரவி குமுதேஷ் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Facebook Comments