இலங்கையில் போர்க் காலத்தில் நடைபெற்ற அப்பட்டமான மனித உரிமைகள் மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச சமூகமும் ஐ நா மன்றமும் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றன. இலங்கை தொடர்பான சிறப்புக் கூட்டம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்று வருகிறது.
இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆப்ரிக்காவின் மலாவி, பிரிட்டன், மசிடோனியா போன்ற நாடுகள் முனைப்பாக உள்ளன. அதற்கு பன்னாட்டு ஆதரவையும் கோரி வருகின்றன.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு ஐ நா மனித உரிமைகள் ஆணையர் மிஷேல் பஷாலே அம்மையாரின் அறிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளன. இலங்கை அரசின் குரலாக ஐ நா மனித உரிமைகள் ஆணையர் செயல்படுகிறார் என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் தென் ஆப்ரிகாவின் ஜொஹனஸ்பர்க் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயல்திட்டம், பல்வேறு தரவுகளைக் கொண்ட விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை சர்வதேசளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையை வெளியிடும் முதல் தமிழ் ஊடகம் என்பதில் “கனடா உதயன்“ பெருமை கொள்கிறது.