பாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு

0
Ivory Agency Sri Lanka

தொற்றுநோய் கருப்பொருளில் ஓவியங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை வைத்திய சங்கம் பாடசாலை மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாலர் பாடசாலை முதல் 10ஆம் தரம் வரையான மாணவர்கள் இதில் பங்கேற்க முடியுமென்பதோடு, ஒரு தரத்தில் உள்ள மாணவர்கள், ஒரு வயது பிரிவினராக கருதப்படுவார்கள்எனவும், வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு சித்திர முறையின் மூலமும் படைப்புகளை சமர்ப்பிக்கலாம் எனவும், ஒரு மாணவருக்கு அதிகபட்சம் இரண்டு சித்திரங்களை சமர்ப்பிக்க முடியுடிமெனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தமது படைப்பின் புகைப்படத்தை 070-3091419 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ஆக்கங்களை ஓகஸ்ட் 30ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்வரும் விபரங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்

முழு பெயர் –
வயது –
பாடசாலை-
தரம் –
முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் –

Facebook Comments