காணாமல் போனவர்களின் உறவினர்களை காணாமல் போனோர் அலுவலகம் அச்சுறுத்துகிறது

0
Ivory Agency Sri Lanka

காணாமல் போனவர்களைத் தேடும் இலங்கையின் முதன்மையான அமைப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தனிப்பட்ட தகவல்களைக் கோருவதால் அச்சமடைந்துள்ளனர்.

சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட விடயங்களை அலுவலகம் கோரியுள்ளதால் தாம் அச்சமடைந்ததாக சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரும், காணாமல் போன தனது கணவருக்காக சுமார் 12 வருடங்களாக போராடி வருபவருமான சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

“காணாமல் போனோர் முறைப்பாடுகள் குறித்து மேலதிக விபரங்களைப் பெறுதல்” என்ற தலைப்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி, காணாமல் போனோர் அலுவலகத்தின் தரவு முகாமைத்துவ பிரதானியான ஏ.என் நுவன் அனுப்பி வைத்த கடிதம் தனக்கு அதிர்ச்சியளித்ததாக சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

“ஏனென்றால், பல வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் அல்லது விசாரணைகள் பற்றிய எந்த புதுப்பிப்பும் இல்லாத நிலையில், அமைப்புக்கு தொடர்பில்லாத தனிப்பட்ட ஆவணங்களுக்கான உங்கள் வேண்டுகோள், நீதிக்கு பதிலாக வன்முறை மற்றும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபரான நான் உணர்கின்றேன்.”

2010 ஜனவரி 24ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன தனது கணவரும், ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொடவை கண்டறிய மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து காணாமல் போனோர் அலுவலகத்தின் தரவு முகாமைத்துவ பிரதானிக்கு மிக நீண்ட விளக்கமளித்துள்ள சந்தியா எக்னலிகொட, தம்முடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கடிதத்தில் அவரது சந்தேகங்களுக்கான நியாயமான காரணங்களையும் அவர் உள்ளடக்கியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கும் விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பிரகீத் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரணைகளில் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த ஆணைக்குழு பாதிக்கப்பட்ட எனக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்காமல் அல்லது அழைப்பும் விடுக்காமல், நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல், வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தி ஒருதலைப்பட்சமாக செயற்படுகின்றது.”

குற்றவாளிகளை விடுவித்த ஆணைக்குழு, முறையான விசாரணையை நடத்தியதாகவும், பிரகீத் காணாமல் போனமை குறித்த உண்மையை வெளிக்கொண்டு வந்த அதிகாரிகளை பாராட்டுவதற்கு பதிலாக தண்டித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள சந்தியா எக்னெலிகொட, இந்த தீர்மானமானது, இலங்கை குடிமகளாக அரசிய் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ”சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி நியாயமாக இருக்க வேண்டு” என்ற தனது அடிப்படை அரசியலமைப்பு உரிமையை மீறுவதாக அமைந்துள்ளாதாக குறிப்பிட்டுள்ளார்.

மீறல்களுக்கு தலைமை வகித்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தற்போது காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவராக செயற்படுவதாகவும், இந்த அலுவலகத்தை ஒரு பக்கச்சார்பற்ற, சுயாதீனமான அமைப்பாக நம்பலாமா எனவும், அது பாதிக்கப்பட்டவருக்கு தேவையான உளவியல் மற்றும் சமூக ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா? எனவும் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தில் தரவு பிரதானியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

2016ஆம் ஆண்டு நிலைமாறு கால நீதி பொறிமுறையின் முதல் படியாக நிறுவப்பட்ட காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் உள்ளிட்ட ஆணையாளரின் நியமனமும், தற்போதைய அதிகாரிகள் நியமனம் மற்றும் அமைப்பு முற்றிலும் வேறுபட்டுள்ளதோடு, அலுவலகத்தில் சுயாதீனத்தன்மை குறித்த நம்பகத்தன்மை சிதைந்துள்ளது.”

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நிறுவனம் காணாமல்போனோர் குறித்த அலுவலகம் என்பதை நினைவு கூர்ந்த சந்தியா எக்னெலிகொட, ICRC மற்றும் UNWGEID ஆகிய நிறுவனங்களுடன் நேரடியாகக் கையாளாமல் கடிதங்களை கோருவது மறைமுக அழுத்தமாகவே பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல்போனமை குறித்த மேலதிக தகவல்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமெனின் வழக்கு விசாரணைகளை அவதானிக்குமாறு சந்தியா எக்னெலிகொட காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களின் அலுவலகம் காணாமல் போன, காணாமல் போன குடும்பங்கள் அனுபவிக்கும் வலி மற்றும் அதிர்ச்சியை ஏற்றுக்கொள்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் / காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பொறுப்புக்களை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்,” என அவர் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் முன்னாள் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்த விடயம் கடிதத்தின் நிறைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றரை வருடங்களை நிறைவு செய்துள்ள காணாமல்போனோர் குறித்த அலுவலகம்

காணாமல் போனவர்களைக் கண்டறிய இன்றும் போராடிக் கொண்டிருக்கும் உறவினர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரைக் கண்டுபிடிக்கத் தவறியுள்ள காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம் மூன்றரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

பெப்ரவரி 28, 2018 அன்று மைத்திரி – ரணில் அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகத்தை உருவாக்கியது.

Facebook Comments