இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை நீதிக்காக பச்செலெட்டை சந்தித்தது

0
Ivory Agency Sri Lanka

இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு சர்வதேச சமூகத்தை நாடியுள்ளது.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல்” தொடர்பில் கொழும்பு பேராயர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மார்ச் 2ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) சுமார் 45 நிமிடங்கள் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளனர்.

ஜெனிவா செல்வதற்கு முன் வத்திக்கானில் போப் பிரான்சிஸ் உடனான கர்தினால் சந்திப்பின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன, எனினும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

கத்தோலிக்க திருச்சபை கர்தினாலின் கருத்துக்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கென ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது நடத்தப்படாது எனவும், அது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் கொழும்பு மறைமாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்தவை மேற்கோள்காட்டி கிறிஸ்தவ செய்தி இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

Facebook Comments