ஸ்கொட்லாந்து புகைப்பட கலைஞரின் பார்வையில் கடந்த கால இலங்கை, கொழும்பில் கண்காட்சி

0
Ivory Agency Sri Lanka

கி.பி 1907ஆம் ஆண்டு இலங்கை வந்த ஸ்கொட்லாந்து ஓவியர் எட்வர்ட் அட்கின்சன் ஹோனெல் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி இம்மாதம் கொழும்பில் நடைபெற உள்ளது.

”A Scottish Artist in Ceylon” என்ற பெயரில் National Trust Sri Lankaவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி ஜனவரி 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கொழும்பு லயனல் வென்ட் கலைக்கூடத்தின் ஹெரல்ட் பீர்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இலங்கையின் கிராமப்புற வாழ்க்கையை பிரதிபலிக்கும் 46 பழைய புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

புகைப்படக் கண்காட்சியின் முதல் நாள் காலை 10.30 மணிக்கு சமூக மானுடவியல் விரிவுரையாளராகப் பணிபுரியும் விந்தியா புத்பிடியவின் ‘An Island Partly Photographed: Absent, Present Histories’ என்ற தலைப்பில் விரிவுரை நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் இந்த புகைப்படக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

Facebook Comments