”நாட்டின் சிறந்த ஏற்றுமதியாளர்” நாட்டிற்கு ஆபத்தை விளைவிப்பதாக குற்றச்சாட்டு (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

கொரோனா அறிகுறிகளைக் காட்டிய தொழிலாளர்களை புறக்கணிப்பதன் ஊடாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட பிராண்டிக்ஸ் நிவுனத்தின் நடவடிக்கைகளால் இந்த தொற்று நாடு முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 28ஆம் திகதி, வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு முன்னதாக சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக தொழிற்சாலை பணியாளர்கள் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இதுத் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும், அமெரிக்காவுக்கு முகமூடிகளை கூட அனுப்பும் நிறுவனமான பிராண்டிக்ஸ் அவதானம் செலுத்தவில்லை என தொழிற்சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளராக பல ஜனாதிபதி விருதினைப் வென்றுள்ள பிராண்டிக்ஸ், அதன் தற்போதைய நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களில் பாதி பேருக்கு சரியான நேரத்தில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், வைரஸிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும் என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அன்டன் மார்கஸ் சுட்டிக்காட்டுகின்றார்.

நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தொற்றுநோயியல் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, வெளியிட்ட தகவல்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

“தொற்றுக்குள்ளான முதல் தொழிலாளி செப்டம்பர் 28ஆம் திகதி கண்டறியப்பட்டார், எனினும் செப்டம்பர் 20ஆம் திகதி, தொழிற்சாலையில் சுவாச நோய் பாதிப்பிற்குள்ளான தொழிலாளர்களை நாங்கள் கண்டறிந்தோம்.”

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக பெண் ஊழியர் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளும் வரை அறிகுறிகளுடன் காணப்பட்ட எந்தவொரு ஊழியருக்கும் பிராண்ட்டிக்ஸ் எந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை வைத்தியர் சுதத் சமரவீரவின் அறிக்கை உறுதிப்படுத்துவதாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒக்டோபர் 7ஆம் திகதி, “உலக கண்ணியமான வேலைவாய்ப்பு தினத்தை” முன்னிட்டு சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவைகள் தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித வாழ்க்கைக்கான இந்த கடுமையான புறக்கணிப்பு ஆடைத் தொழிலில் உள்ள பிற தொழிற்சாலைகளிலும் இவ்வாறே காணப்படுமென தாம் கருதுவதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட முதல் நபரை அடையாளம் கண்ட பின்னர், சரியான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

“பிராண்டிக்ஸ் அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயற்படுத்தியுள்ளதுடன், பொது சுகாதார பரிசோதகர்கர்கள் உட்பட சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்போடு, நோய்த்தொற்றை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சைக்காக பணியாளரை ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்க முடிந்தததன் ஊடாக, வைரஸ் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

சுதந்திர வர்த்தக வலையம்

இந்த வைரஸ் பிற பிராண்டிக்ஸ் கிளைகளுக்கும் பிற நிறுவனங்களுக்கும் பரவியுள்ளதாக தொழிலாளர் அமைப்புகள் எச்சரிக்கின்றன.

மினுவாங்கொடை பிராண்டிக்ஸ் கொரோனா கொத்தணியில் ஆரம்பமாகி, தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில், கொரோனா இரண்டாவது அலை ஆரம்பத்துடன், கட்டுநாயக்க மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ள தாபிந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷமிலா துஷாரி, கட்டுநாயக்கவைச் சுற்றி பிராண்டிக்ஸுடன் இணைக்கப்பட்ட நான்கு நிறுவனங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல் நோயாளி பதிவாவதற்கு முன்னர், மினுவங்கொடையில் உள்ள பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் உடல்நலக்குறைவு காரணமாக விடுமுறை கோரியிருந்த போதிலும், அதிகாரிகள் அவர்களுக்கு அதற்கு அனுமதி வழங்கவில்லை என ஷமிலா துஷாரி கூறியுள்ளார்.

நிறுவனத்தில் உள்ள ஏனைய நிறுவனங்கள்

மினுவாகொடையில் உள்ள பிராண்டிக்ஸின் மனிதவளத் துறையில் பணியாற்றுபவர்கள் கூட வைரஸால் பாதிக்கப்பட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதவள அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் பணியாற்றும் ஊழியர்களும் பிராண்டிக்ஸுடன் இணைந்த பல நிறுவனங்களில் பணிபுரிவதால் அவர்களுக்கு ஆபத்து காணப்படுவதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

“இன்று அவர்கள் மினுவங்கொடையில் இருக்கிறார்கள், நாளை அவர்கள் கட்டுநாயக்கவில் இருக்கிறார்கள், மறுநாள் அவர்கள் சீதுவ, ஏகல மற்றும் வெலிசரவில் இருக்கிறார்கள்.”

பிராண்டிக்ஸின் இரண்டு கிளைகளில் கணவன்-மனைவி பணியாற்றுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுவதாக தாபிந்து நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி சுட்டிக்காட்டுகிறார்.

“இந்த நேரத்தில் திருமணம் செய்துகொண்ட மற்றவர்களும் காணப்படுகின்றனர். அவரது கணவர் திருமணமாகி மினுவாங்கொடையில் உள்ள பிராண்டிக்ஸில் பணிபுரிகிறார். அவரது மனைவி கட்டுநாயக்கவில் உள்ள பிராண்டிக்ஸில் பணிபுரிகிறார். பின்னர் அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். இது மற்றொரு ஆபத்து”

இத்தகைய சூழ்நிலையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடமைக்கு சமூகமளிக்க அஞ்சுவதாகவும், அதிகாரிகள் அவர்களுக்கு விடுமுறை வழங்காமல் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுவதாகவும் சமிலா துஷாரி தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் கண்டறியப்பட்ட முதல் நோயாளி பிராண்டிக்ஸால் அடையாளம் காணப்பட்ட முதல் தொற்றாளர் அல்லவெனவும் அவர் இடைத்தரகராக இருக்கலாம் எனவும், தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர கூறியுள்ளார்.

800 நோயாளிகளில் முதல் நேயாளரை கண்டுபிடிப்பது கடினமானது என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்திய அவர், அனுராதபுரம், பதுளை, காலி, குருநாகல், மொனராகலை, புத்தளம், கேகாலை, களுத்துறை, கண்டி, மத்தறை, பொலன்னருவை, யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிராண்டிக்ஸ் நிறுவனம், மினுவாங்கொடையில் முதல் நோயாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், காசல் வைத்தியசாலை, சீமாட்டி ரிச்வே குழந்தைகள் வைத்தியசாலை, சீதுவ பிராண்டிக்ஸ் நிறுவனம், எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனம், கம்பஹா பொது வைத்தியசாலை, மினுவங்கொடை தனியார் நிறுவனம், ஐசிபிடி தனியார் பல்கலைக்கழகம், புனித ஜோசப் கல்லூரி, புனித பிரிட்ஜெட் கல்லூரி, கொழும்பு மாநகர சபை, நாடாளுமன்ற விவகார அமைச்சு, கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் சிலாபம் பொது வைத்தியசாலை ஆகிய இடங்களில் நோய்த்தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மினுவாங்கொடையில் சிலருக்கு அறிகுறிகளைக் காட்டினாலும், பெரும்பான்மையானவர்கள் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என தெரிவிக்கும் வைத்தியர் சுதத் சமரவீர, இந்த கொத்தணியின் தனித்தன்மை என்னவென்றால், இந்த கொத்தணியில் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை முன்னைய பி.சி.ஆர் பரிசோதனை தரவை விட அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கின்றார்.

புதிய நோயாளர்கள் வைரஸின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஒரு நபரின் உடலில் அதிகமான வைரஸ்கள் ஏற்படக்கூடும் எனவும், தொற்றுநோயியல் பிரிவு பணிப்பாளர் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர அச்சம் வெளியிட்டுள்ளார்.

Facebook Comments