இரண்டு இலங்கை புகைப்படக் கலைஞர்கள் சர்வதேச போட்டியில் முதல் இடத்தை வென்றுள்ளனர்.
குப்பைகளை உண்ணும் யானைகளின் சோகமான நிலையை சித்தரிக்கும் திலக்சன் தர்மபாலனின் புகைப்படம், ‘எங்கள் மாறும் உலகம்’ என்ற தலைப்பில் ரோயல் உயிரியல் சமூகம் ஏற்பாடு செய்திருந்த இந்த வருட புகைப்பட போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
அதே போட்டியில், 14 வயதான அஸ்வின் கீர்த்தன் இந்த ஆண்டின் சிறந்த இளம் புகைப்படக் கலைஞராக முதலிடம் பிடித்துள்ளார்.
மீனவர்கள் விட்டுச் சென்ற கம்பங்களில் நீர்க்காகங்கள், நீரில் மீன்களைக் கண்டுபிடிக்க காத்திருப்பதை அந்தப் புகைப்படம் காட்டி நிற்கின்றது.