தோல்வி அச்சத்தில் அரசாங்கம், தேர்தலை இரத்து செய்ய முயற்சி (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

தோல்வி அச்சத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பல்வேறு சூழ்ச்சிகளை ரணில்-ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இலங்கையின் பிரபல தொழிற்சங்கம் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

தேர்தலை நடத்தாமல் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை இல்லாது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிட முடியாது என இலங்கை அச்சகம் அறிவித்துள்ள விடயமானது சூழ்ச்சியின் ஒரு அங்கமென அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அரச அச்சகத் தலைவரின் ஊடாக இந்த சூழ்ச்சி இடம்பெறுகிறது. வரலாற்றில் ஒரு நாளும் பணம் இல்லையென இவை இடம்பெறவில்லை. பணம் இல்லையென்றே இந்த நாடகம் நடக்கிறது.”

இலங்கை மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்காத தற்போதைய அரசாங்கம் வாக்குரிமையையும் இல்லாது செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் எனினும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments