அரசாங்கத்திற்கு NGO ஆதரவு தொடரும்

0
Ivory Agency Sri Lanka

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு அமைக்கப்பட்ட நிலையங்களின் நிர்வாகத்திற்காக அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை நாடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பினை வழங்க வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தற்காலிக பெண்கள் பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவற்றில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள நிலையங்களை நிர்வகிக்க 2018 முதல் ”வுமன் இன் நீட்” (WIN) மற்றும் யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு நிலையம் (JSAC) ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வின் என்பது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினரான சாவித்ரி விஜசேகர நடத்தும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு நிலையத்திற்கு, யாழ்ப்பாண தன்னார்வ தொண்டு நிறுவன சபையின் தலைவர் நடராஜா சுகிர்தராஜ் தலைமை வகிக்கின்றார்.

2021 ஆம் ஆண்டில் குறித்த பாதுகாப்பு நிலையங்களின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொடர்ந்து குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Facebook Comments