வனவிலங்கு சரணாலயத்தை பகிர்ந்தளிக்க அரசு தீர்மானம்

0
Ivory Agency Sri Lanka

நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் சரணாலயமாக ஒதுக்கப்பட்ட காணிகள் ராஜபக்ச அரசாங்கத்தில் வேறு தேவைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு கடந்த 2015 ஜூன் 22 ஆம் திகதி நெடுந்தீவில் 1,728 தசம் ஹெக்டேயர் நிலப்பகுதியை வன, விலங்கு பாதுகாப்பு சரணாலயத்துக்கானதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த நிலப்பரப்பிலிருந்து மக்கள் வாழ்விடம், அபிவிருத்தி, பயிர் செய்கை போன்றவற்றுக்குப் பெருமளவான பகுதியை விடுவிக்குமாறு 2021 பெப்ரவரி 14 ஆம் திகதி அமைச்சின் வட மாகாண பணிப்பாளர் மா.பரமேஸ்வரன் மற்றும் வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்காவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் யுத்தத்திற்கு முன்னர் தாம் வாழ்ந்த காணிகளை ஆக்கிரமித்தமைக்கு எதிராக வடக்கில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மனித நடமாட்டத்திற்காக வனவிலங்கு சரணாலயத்தை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கமைய, நெடுந்தீவு சரணாலயத்தில் உள்ள 1,191 ஹெக்டேயர் காணிகளை விடுவிக்குமாறு வடமாகாண வனஜீவராசிகள் பணிப்பாளர் 2021 மார்ச் 08 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் யுத்தத்திற்கு முன்னர் தாம் வாழ்ந்த காணிகளை ஆக்கிரமித்தமைக்கு எதிராக வடக்கில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மனித நடமாட்டத்திற்காக வனவிலங்கு சரணாலயத்தை அரசாங்கம் ஒதுக்கீடு செய்கிறது.

நெடுந்தீவு தேசியப் பூங்கா, இலங்கையின் அதிக காட்டு குதிரைகள், நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகளின் சரணாலயமாக காணப்படுகின்றது.

Facebook Comments