தொழிற்சங்கத் தலைவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக தொழில் அமைச்சருக்கு அறிவிப்பு

0
Ivory Agency Sri Lanka

தொழிற்சங்கத்தை அமைத்தமையால் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் குழுவை மீண்டும் பணியில் அமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பல அரசு மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

ஜிஎஸ்பி பிளஸ் வரி நிவாரணத்தை நீட்டிப்பது பொருத்தமானதா என்பதை ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு இலங்கைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, சர்வதேச சந்தைக்கு கையுறைகளை ஏற்றுமதி செய்யும் ஏடிஜி க்ளவுஸ் தனியார் நிறுவனம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் சங்கம், ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்த ஒரு தொழிற்சங்கம், ஓகஸ்ட் 20, 2021 அன்று, வத்துபிடிவலவில் ஏடிஜி க்ளவுஸ் தனியார் நிறுவனத்தில் தொழிற்சங்க கிளையை நிறுவியது.

இந்த கிளை தொழிற்சங்கத்தை நிறுவுவது குறித்து வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் தெரிவித்தவுடன், நிறுவனம் தொழிற்சங்கத்தின் 16 உறுப்பினர்களை நான்கு நாட்களுக்குள் பணிநீக்கம் செய்தது.

ஓகஸ்ட் 24, 2021 அன்று நடந்த தேசிய தொழிலாளர் ஆலோசனை பேரவைக் கூட்டத்தில் இந்த பிரச்சினையை எழுப்பியபோது, சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் மற்றும் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள், ஏடிஜி நிறுவனம் பல வருடங்களாக இயங்கி வரும் தொழிற்சங்கங்களின் சிதைவு மற்றும் நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளில் கவனம் செலுத்தியுள்ளதாக, தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு கடிதமொன்றை அனுப்பி தெளிவுபடுத்தியுள்ளனர்.

“இந்த பிரச்சினையை தொழிற் திணைக்களம் ஊடாக தீர்ப்பதாக நீங்கள் தெரிவித்தீர்கள்”

வத்துபிடிவலவில் ஏடிஜி தொழிற்சங்கங்களை இல்லாது செய்து ஒரு மாதமாகிவிட்டது, ஆனால் நிறுவனத்தின் நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்த தொழிற் திணைக்களம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிற்சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வத்துப்பிட்டிவலவில் உள்ள ஏடிஜி நிறுவனம், இதுபோன்ற கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் இருந்தபோதிலும், எவ்வித தடையும் இன்றி அதன் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்வதாக, 23 பொது மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் சார்பாக இலங்கை தொழிற்சங்கங்களின் பொதுச் செயலாளர் டிடபிள்யூ சுபசிங்க கையெழுத்திட்டு தொழில் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒரு தொழிற்சங்கத்தில் சேர்ந்தமையால் பணிநீக்கம் செய்யப்பட்ட 16 ஊழியர்களின் குடும்பங்கள் கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில், உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு பணம் இன்றி பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொழிற்சங்கங்கள் அகற்றப்படுவது இது முதல் முறை அல்ல எனவும் இவைத் தொடர்பில் தொழிற் திணைக்களம் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“தொழிலாளர் வழக்குகள் நீடிக்கும் போது பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஒரு சிறிய தீர்வுக்கு ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை சுதந்திர வர்த்தக வலைய தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் நன்கு அறிவார்கள். பல வருட வழக்கின் பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் குறைகள் தீர்க்கப்படும்போது, தொழிற்சங்கம் இனி செயற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் புதிய தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேர்ந்து தங்கள் வேலைகளை பணயம் வைக்க தயங்குகிறார்கள். 1999ஆம் ஆண்டின் தொழில்துறை தகராறுகள் நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளுக்கு எதிரான சட்டமாக திருத்தப்பட்டாலும், சட்ட அமுலாக்கம் மெதுவாகவும் திறமையற்றதாகவும் உள்ளது. புத்தகங்களில் விதிகள் இருந்தபோதிலும், முதலாளிகள் தொழிற்சங்கங்களை உடைக்க முடிந்தது, ஏனென்றால் அவர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்க முயற்சிக்கும்போது ஊழியர்ககளுக்கு பாதுகாப்பு இல்லை. ”

புதிய ஓய்வூதியத் திட்டம் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை இலக்காகக் கொண்டது, அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள் முன்பு போலவே அதே நன்மைகளை அனுபவிப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தகைய பின்னணியில், தொழிற்சங்கத் தலைமை தனது கடிதத்தில் அமைச்சரிடம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அனுமதி மற்றும் ஒப்புதல் இல்லாமல் எந்த நிறுவனமும் சுதந்திர வர்த்தக வலையங்களில் தொடர்ந்து செயற்பட முடியாது எனவும், எனவே, ஊழியர்களின் உரிமைகள் மற்றும் வேலை பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியுமெனவும் தொழிற்சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

அரசு ஏற்றுமதி துறை தொழிலாளர்கள் முக்கிய தொழிலாளர்களாக செயல்பட்டதாகவும், கோவிட் -19 நெருக்கடியின் போது பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பு பாராட்டப்பட்டது.

நிலையான வேலை சூழலை உருவாக்குவதற்கு அவசியமான தொழிற்சங்க உரிமைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பாதுகாப்பு ஆகியவை தொழிலாளர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு வழிகாட்டியாக இருக்குமென தொழிற்சங்கத் தலைவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

“அரசாங்கத்தின் தலையீடு இல்லாதபோது, தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் சர்வதேச நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டும்.”

எனவே, தொழிலாளர்களின் உரிமைகளை குறிப்பாக ஒழுங்கமைக்கும் உரிமையை பாதுகாக்க அரசாங்கத்திற்கு இயலும் எனவும், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவது ஒரு தேசிய நலன் எனவும், தொழிலாளர் சட்ட மீறல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொழிற்சங்கத் தலைவர்கள் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கோரியுள்ளனர்.

வதுபிடிவல ஏடிஜி நிறுவனம் தனது 16 ஊழியர்களுக்கு எதிராக சட்டவிரோதமாக மேற்கொண்ட நடவடிக்கைகளை அரசு தலையிட்டு கேள்வி எழுப்ப வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.டபிள்யூ.சுபசிங்க தொழில் அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் பின்வரும் தொழிற்சங்கங்கள் சார்பாக கையெழுத்திடப்பட்டது.

1. சன்ன திசாநாயக்க – தலைவர், இலங்கை வங்கி ஊழியர் சங்கம்
2.அன்டன் மார்கஸ் – இணைச் செயலாளர், சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கம்
3. ரொபர்ட் பிரான்சிஸ் – பொதுச் செயலாளர், இலங்கை பெருந்தோட்ட சேவை சங்கம்
4. சில்வெஸ்டர் ஜெயக்கொடி – பொதுச் செயலாளர், இலங்கை வர்த்தக மற்றும் தொழில் பொது ஊழியர் சங்கம்
5. லெஸ்லி தேவேந்திர – பொதுச் செயலாளர், இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம்
6. பாலித அத்துகோரள – தலைவர், இலங்கை வணிகர் மாலுமிகள் சங்கம்
7. வசந்த சமரசிங்க – தலைவர், பொது ஊழியர் சங்கம்
8. சி.டி அடமொரதென்ன – பொதுச் செயலாளர், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம்
9. லலிதா தெத்துவகுமார – தலைமை அமைப்பாளர், ஆடை மற்றும் தைத்த ஆடை தொழிலாளர் சங்கம்
10. ஜோசப் ஸ்டாலின் – பொதுச் செயலாளர், இலங்கை ஆசிரியர் சங்கம்
11. உதேனி திசாநாயக்க – பொதுச் செயலாளர், தேசிய தொழிற்சங்க முன்னணி
12. சுனில் டி சில்வா – துணைத் தலைவர், தேசிய சேவை சங்கம்
13. ஜெகத் குருசிங்க – இணைச் செயலாளர், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அனைத்து ஊழியர் சங்கம்
14. ஹரிப்ரியா ஹெட்டியாராச்சி – தலைவர், தொலைத்தொடர்பு பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கம்
15. லால் பங்கமுவ – தலைவர், சுதந்திர துறைமுக ஊழியர் சங்கம்
16. டி.டபிள்யு.ஆர் திவாகர – தலைவர், காப்புறுதி ஊழியர் சங்கம்
17. டி.எம்.ஆர் ரசதீன் – பொதுச் செயலாளர், இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பு
18. தர்மசிறி லங்காபேலி – பொதுச் செயலாளர், ஊடக தொழிலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு
19. கல்ப மதுரங்க – பொதுச் செயலாளர், ப்ரொடெக்ட் கழகம்
20. சமிலா துஷாரி – செயலாளர், தாபிந்து கூட்டுச் சங்கம்
21. அஷிலா தந்தெனிய – பொதுச் செயலாளர், ஸ்டாண்ட்அப் ஊழியர் சங்கம்
22. லினஸ் ஜெயதிலக – தலைவர், ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு

 

Facebook Comments