விவசாயிகளிடையே சேதன பசளையை பயன்படுத்தும் அறிவு இல்லை

0
Ivory Agency Sri Lanka

இரசாயனம் இல்லாத விவசாயத்திற்கு மாறுவதற்கு தேவையான அறிவில் சிந்தனை குறித்த நம்பிக்கை இலங்கை விவசாயிகளிடையே மிகக் குறைவாக காணப்படுவதாக அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

வெரிடே ரிசர்ச் ஆய்விற்கு அமைய, விவசாயிகளில் 20 வீதமானவர்கள் மாத்திரமே தங்களுக்கு பொருத்தமான சேதன பசைளை மற்றும் அதை தமது பயிர்களுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்ற அறிவு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஏப்ரல் 22ஆம் திகதி இலங்கைக்கு இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்படுவதாக அறிவித்தார்.

வெரிட்டே ரிசர்ச் இந்தக் கொள்கை தொடர்பிலும் அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் தாக்கம் குறித்தும் இலங்கை விவசாயிகளின் கருத்தைப் பெறுவதற்கு வெரிட்டே ரிசேர்ச் ”பாமர்ஸ் பல்ஸ்-Farmers’ Pulse” என்னும் தொலைபேசி மூலமான கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது.

முழு இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் இந்தக் கொள்கை தொடர்பில் விவசாயிகளின் கருத்து முன்வைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

முக்கிய விடயங்கள்

கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட விவசாயிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தற்போது இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கின்றனர்.

அவர்களில் அநேகமானவர்கள் (85%) இரசாயன உரங்களைப் பயன்படுத்த முடியாவிட்டால் அறுவடை பாரிய அளவு குறையும் (சராசரியாக 47% குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது) என எதிர்பார்க்கின்றனர்.

இயற்கை விவசாயத்தை நோக்கி இலங்கையைக் கொண்டு செல்லும் அரசாங்கத்தின் இலக்கிற்கு ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவர்களில் 80 சதவீதமானவர்கள் இதனைச் செய்து முடிப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேல் தேவைப்படும் எனக் கருதுகின்றனர்.


முக்கிய கண்டுபிடிப்புகள்

இரசாயன உரங்களில் அதிகளவில் தங்கியிருப்பது நெல் பயிர்ச்செய்கையாளர்கள் (94%) அவர்களுக்கு அடுத்து தேயிலை மற்றும் இறப்பர் (89%) செய்கையாளர்கள்.

இந்த மாற்றத்திற்குத் தேவையான அறிவு தொடர்பில் நம்பிக்கை குறைவாகக் காணப்படுகிறது. பொருத்தமான இயற்கை உரங்கள் மற்றும் அவற்றைப் பயிர்களுக்குப் பயன்படுத்துவதற்கான சரியான முறை தொடர்பில் 20% விவசாயிகள் மட்டுமே போதுமான அறிவைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் அரசாங்கத்திடம் முன்வைக்கும் மூன்று முக்கிய கோரிக்கைகள்

1) இயற்கை உரங்கள் தொடர்பில் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்கள்

2) கூடுதல் காலம், இதன் மூலம் படிப்படியான மாற்றம் ஏற்படும்

3) இயற்கை மாற்றுகளின் தரப்படுத்தப்பட்ட விநியோகம்.

இலங்கையில் நிபுணத்துவம் வாய்ந்த கருத்துக்கணிப்பு முகவரகமான வான்கார்ட் சர்வே ஊடாக இந்தத் தொலைபேசி வாயிலான கருத்துக்கணிப்பை 1,042 விவசாயிகளிடம் 2021 ஜுலையின் வெரிட்டே ரிசேர்ச் நடத்தியது.

இந்தக் கருத்துக்கணிப்புக்கான மாதிரியானது வர்த்தக நோக்கங்களுக்காகப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை உள்ளடக்கியதுடன், 9 மாகாணங்களுக்கும் இடையே சம அளவில் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரை ஏக்கருக்கு மேல் பயிர்ச் செய்கை மேற்கொள்வதோடு மூன்று வருடங்களுக்கு மேலாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மட்டுமே இக் கருத்துக்கணிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நெல், பழங்கள், மரக்கறிகள், தேங்காய், தேயிலை, சிறு ஏற்றுமதிப் பயிர்கள் (வாசனைப் பொருட்கள்) மற்றும் சிறுதானியங்கள் ஆகியவற்றைப் பயிரிடும் விவசாயிகளிடையே இந்தக் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

Facebook Comments