‘தொழிலாளர் போராட்டம்’ திகா, ‘தேர்தல் பிரச்சாரம்’ ஜீவன்

0
Ivory Agency Sri Lanka

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகக் கோரி வீதியில் இறங்கியுள்ளனர்.

”நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தோட்டத்தொழிலாளர்கள் கூட இந்த அரசாங்கத்திடம் இருந்து நாட்டை காப்பாற்ற வீதியில் இறங்கியுள்ளனர். கோட்டாபய ராஜபக்சவை பதவிக்கு கொண்டுவர கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவரை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கின்றனர்” என தேசிய முற்போக்குக் கூட்டணியின்பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நேற்று தலவாக்கலையில் ஒன்றுகூடினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய திகாம்பரம், நாடு முழுவதிலும் உள்ள மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றார்.

அரசாங்கத்தின் பங்காளியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அண்மையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது.

இதனைக் குறிப்பிட்ட தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் மக்களை விட்டு வெளியேறி மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள நேரிடும் என்றார்.

“மக்கள் போராட்டத்திற்கு பயந்து மலையக அரசியல்வாதிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இது ஒரு அரசியல் நாடகம். இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.”

“அரசு வந்து இவர்களுக்கு அமைச்சு பதவியை கொடுத்தால் மக்களைத் புறந்தள்வி தாவிச் சென்று ஆட்சியில் இணைவார்கள்.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அந்த பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், ராஜபக்ச அரசாங்கம் அவற்றை நிவர்த்தி செய்யத் தவறியுள்ளதாக குறிப்பிட்டார்.

“மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்து ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் இன்னும் ஆட்சியில் உள்ளனர்.”

இந்த அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்.

எவ்வாறெனினும் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், தலவாக்கலை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தை சஜித் பிரேமதாசவிற்கான தேர்தல் பிரச்சாரம் என விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments