மனுக்களைத் தவிர்ப்பதற்காக இந்தியப் பிரதிநிதிகளுக்கு இலங்கை பொலிஸ் உதவி (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

ஆறு மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் அமைப்பு ஒன்றினால் கையளிக்கப்பட்ட கடிதத்தைத் தவிர்ப்பதற்கு இலங்கை பொலிஸ் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு உதவி செய்துள்ளது.

வலுக்கட்டாயமாக காணாமல் போதல்களுக்கு எதிரான ஆசிய கூட்டமைப்பின் (AFAD) தலைவரும், ஜம்மு காஷ்மீர் ‘காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தின் (APDP) அமைப்பாளருமான குர்ரம் பர்வேஸ், 2021 நவம்பர் 22ஆம் திகதி கைது செய்யப்பட்டு கடந்த190 நாட்களுக்கும் மேலாக டெல்லி ரோகினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் திங்கட்கிழமை (மே 30) இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அவரை விடுவிக்கக் கோரிய கடிதத்தை வழங்குவதற்கான முன் அறிவிப்புடன் சென்றனர், ஆனால் எந்தவொரு பிரதிநிதியும் கடிதத்தைப் பெறவில்லை என தலைநகரில் உள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்களுக்கு உதவ வேண்டிய பொலிஸார், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி ஒருவருடன் ஒருங்கிணைத்து அந்த நேரத்தில் தமக்கு இடையூறு விளைவித்ததாகவும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள குராம் பர்வேஸை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய மனித உரிமை ஆர்வலர் ஒருவரை விடுவிக்குமாறு கோரும் கடிதத்தைப் பெற, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒரு பிரதிநிதி ஒருவர் இல்லையெனின், குறைந்தபட்சம் ஒரு பாதுகாவலரை அல்லது கடைநிலை ஊழியர் ஒருவரையாவது விடுவிக்குமாறு, சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலர் பிரிட்டோ பெர்னாண்டோ, காவல்துறையிடம் கோரும் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.

“காணாமல் போனவர்களின் உரிமைகளுக்காக உயிர் தியாகம் செய்த ஒருவரை சட்டவிரோதமாக கைது செய்யுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதும், இந்த கொடூரமான குற்றம் மீண்டும் நிகழாமல் தடுப்பதும் எங்களின் நோக்கமாகும். எனவே, குர்ரம் பர்வேஸை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிட வேண்டும் எனவும் இந்திய அரசை வலியுறுத்துகிறோம்” என சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலர் பிரிட்டோ பெர்னாண்டோ கையெழுத்திட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக இலங்கையில் பலவந்தமாக காணாமல் போதல்களுக்கு எதிராக போராடி வரும் பிரிட்டோ பெர்னாண்டோ, இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமானவர் என தெரிவித்துள்ளார்.

“கோட்டாபய ராஜபக்ச மாத்தளையில் கட்டளைத் தளபதியாக இருந்த போது ஒன்பது மாதங்களில் 700 பேர் காணாமல் போயினர். 700. ஒக்டோபர் 7ஆம் திகதி அறுபதாயிரம் பேர் காணாமல் ஆக்கினார்.”

போரின் போதும் அதன் பின்னரும் இலங்கையில் இடம்பெற்ற பலவந்தமான காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் மனித உரிமை ஆர்வலர் குரல் எழுப்பினார்.

ஜே.வி.பி.யின் இரண்டாம் கிளர்ச்சியின் போது இராணுவத்தின் மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பானவராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகளை விபரித்து itjpsl மற்றும் JDSLanka ஆகியன வெளியிட்ட சிங்கள துண்டுப்பிரசுரம் அண்மையில் கோட்டகோகமவில் செயற்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

அந்த துண்டுபிரசுரம் இங்கே; https://itjpsl.com/ta/reports/gotabaya-rajapaksa-the-sri-lankan-presidents-role-in-1989-mass-atrocities

Facebook Comments