பயங்கரவாதச் சட்டங்களை நீக்க சிங்கள-பௌத்த ஆதரவு கோரப்பட்டுள்ளது

0
Ivory Agency Sri Lanka

நாட்டில் பயங்கரவாதம் இல்லாத அரசியல் பின்னணியில், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்” கீழ் இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் கைதுகள் ஊடாக சட்டம் தவறாகப் பயன்படுத்துவதாக, சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமையான தொழிற்சங்கம் ஒன்று கண்டித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு கோரி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்த தெற்கில் உள்ள சிங்கள பௌத்த சமூகமும் முன்வர வேண்டும் என சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம் வலியுறுத்துகிறது.

மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிக்குமாறு அரசாங்கங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் பின்னணியில், பாதுகாப்புப் படையினர் இந்தச் செயலைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ், அறிக்கை ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் மேலும் இருவர் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஓகஸ்ட் 21ஆம் திகதி பொறுப்பேற்றுள்ளதுடன், பொலிஸ் மா அதிபர் அரசாங்கத்திற்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளார்களா என ஆராயுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக, அதேநாளில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்ததை நினைவுகூர்ந்த தொழிற்சங்க தலைவர், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை “சூழ்ச்சி” என அழைப்பதால் அது தண்டனைக்குரிய குற்றமாகாது, ஏனெனில் அரசாங்கத்தை மாற்றுவதற்கான உரிமை மக்களின் முழுமையான உரிமையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதுள்ள சட்டங்களின்படி, “அரசுக்கு எதிரான” சூழ்ச்சி மாத்திரமே குற்றம். அரசியல் தலைவர்கள், ஊடகங்கள் உட்பட பலர் “அரசாங்கம்” என்பதை “அரசு” என பயன்படுத்துவதால், அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை “அரசுக்கு எதிரான” சூழ்ச்சி என கருத முடியாது”

கைது செய்யப்பட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அமைதியை குலைத்ததாகவும், அவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தால், பயங்கரவாதத் தடைச் சட்டம் சட்டத்தின் கீழ் கையாள்வது அவசியமில்லை என சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கத் தலைவர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை அதற்குப் பயன்படுத்தலாம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹசாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர், ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Facebook Comments