விருது பெற்ற சர்வதேச ஊடகவியலாளருக்கு இலங்கையில் இடையூறு

0
Ivory Agency Sri Lanka

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான அடக்குமுறை குறித்து ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய விருது பெற்ற சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் தலைநகரில் பொலிஸ் துன்புறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளார்.

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், வசந்த முதலிகே உள்ளிட்ட அரசாங்க விரோத செயற்பாட்டாளர்களை ஒடுக்குவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான நேர்காணலின் போது அவுஸ்திரேலியாவின் ABC செய்தி வலையமைப்பின் தெற்காசிய நிருபர் அவனி டயஸ் பயணித்த காரை இரண்டு தடவைகள் பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

அந்த வாகனத்தில் யாரோ மறைந்திருப்பதாக பொலிஸார் சந்தேகித்ததாக காணொளியுடள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/ForeignOfficial/status/1570357507305897984

தான் இலங்கையில் இருந்த காலத்தில் யாருடன் பேசிக் கொண்டிருந்தேன் என்பது தனக்கு நன்றாகத் தெரியும் என ஜனாதிபதி ஊடகவியலாளர்களின் அச்சமூட்டும் வகையில் கூறியதை அவனி டயஸ் நினைவு கூர்ந்தார்.

நாட்டில் தாம் பெரும் அழுத்தத்திற்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டம் பற்றி அவர் எழுதிய நோ சரண்டர் என்ற ஆவணப்படம் இங்கே

Facebook Comments