ஷெரின் சேவியர் இயக்கிய இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்பான “முற்றுப்புள்ளியா..?” (நாளைய தினத்தின் வடுக்கள்) கொழும்பில் நாளை திரையிடப்படுகின்றது. திரையிடலைத் தொடர்ந்து ஆவணப்படத் தயாரிப்பாளர் அனோமா ராஜகருணா தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும்.
நான்கு நபர்கள் போருக்குப் பிந்தைய இலங்கையில்தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் கதையை 2016ஆம் ஆண்டின் இத்திரைப்படமானது கூறுகின்றது. அவர்களின் மௌனமானப் போராட்டங்கள், நிறைவேறாத ஆசைகள், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை என்பவற்றைப் பற்றி இத்திரைப்படம் எடுத்துரைக்கின்றது. ஏனையோரைப் போலா, கௌரவம், நீதி மற்றும் சமாதானத்திற்காக ஏங்கும் தமிழர்களின் கதையைச் கூறுகின்றது.
இப்படம் யாழ்ப்பாணத்தில் வாழும் முன்னாள் போராளி, வன்னிப் பகுதியைச் சேர்ந்த வரலாற்றாசிரியர், கொழும்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயலார்வலர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஆகியோரின் பார்வையில், போருக்குப் பின் இலங்கையில் நடந்த உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது.
இத்திரைப்படமானது அவர்களின் ஆறாமல் இருக்கும் காயங்கள், புறக்கணிக்க கடினமான வடுக்கள் , வலி மற்றும் எதிர்பார்ப்பின் உணர்ச்சிகள் போன்ற வேதனை மற்றும் துன்பகரமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றது. இழப்பு, துரோகம் மற்றும் போராட்டம் ஆகியவற்றை உள்ளடக்கும் மற்றும் கவனத்தைப் பற்றிக்கொள்ளும் இக் கதை ஊக்கமளிப்பதோடு இறுதியில் செயற்பாட்டிற்கு அழைப்பு விடுக்க முயல்கின்றது.
“தமிழர்களின் போராட்டத்தின் வரலாறு – புலிகளுடனான தமிழ் சமூகத்தின் உறவைப் போலவே – சிக்கலானது, ஆனால் கௌரவம் மற்றும் சமாதானத்திற்கானப் போராட்டம் இன்னும் நிறைவு பெறுவதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. வலி தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்போது , நீதிக்கான அழைப்புகள் கவனிக்கப்படாமல் இருப்பதனால், நாளைய தினத்தின்வடுக்கள் பெரிதாவதோடு ஆழமாகின்றன, ”என்கின்றார் சுயாதீன திரைப்படத் தயாரிப்பாளர் ஷெரின் சேவியர்.
இடம்: கோதே நிறுவகம், 39, கிரெகரிஸ் வீதி, கொழும்பு 07
திகதி: 03.07.2024
நேரம்: மாலை 6.00 மணி
திரைப்படம் பற்றிய விபரங்கள்
திரைப்படத்தின் பெயர்: “நாளைய தினத்தின் வடுக்கள்” அல்லது “முற்றுப்புள்ளியா..?” (தமிழி மொழியில்)
இயக்குனர்: ஷெரின் சேவியர்
தொகுப்பாளர்: பி. லெனின்
திரைப்படக் கலை: ரவி வர்மன் நீலமேகம்
இசை: சுரேன் விகாஷ்
நடிகர்கள்: அன்னபூரணி, ஹாரிஸ் மூசா, அஜித் தினகரலால், சாம்பவி
வகைப்பாடு: அரசியல் நாடகம்
உற்பத்திச் செய்யப்பட்ட ஆண்டு: 2014-2016, 2016 இல் வெளியிடப்பட்டது
படத்தின் கால அளவு: 01:39:58:04
யூடியூப் மாதிரி விளம்பரத் திரைப்பட இணைப்பு: https://thesocialarchitects.net/muttrupulliyaa/