நாடாளுமன்ற உறுப்பினர் வருகையில் அரசாங்கம் முன்னணியில்

0
Ivory Agency Sri Lanka

அரசாங்கம் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் வருகையில் எதிர்க்கட்சிகளை தோற்கடித்து ஆளும் கட்சி முன்னிலைப் பெற்றுள்ளது.

ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள நாடாளுமன்றத்தின் அனைத்து அமர்வுகளிலும் கலந்து கொண்ட 11 மக்கள் பிரதிநிதிகளை ஒரு அரச சார்பற்ற நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

வெரைட் ரிசர்ச் நிறுவனத்தின் manthri.lkஇன் ஆய்விற்கு அமைய, 11 பேரில் ஏழு பேர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளாவர்.

ஏனயை நான்கு உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளாவர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விட முன்னணியில் இருந்ததை அந்த நிறுவனம் முன்னதாக வெளிப்படுத்தியிருந்தது.

கொடிய தொற்றுநோய் பரவியதால் ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் இல்லை என்றாலும், ஜூலை மாத இறுதிக்குள், கொரோனா தொற்றுநோய் இருந்தபோதிலும், 86 நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒவ்வொரு அமர்வுகளிலும் பின்வரும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாக என்று manthri.lk தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

01. கயாஷான் நவானந்த
02. ஜகத் குமார
03. சுதத் மஞ்சுள
04. சாகர காரியவசம்
05. மதுர விதானகே
06. உபுல் மகேந்திர ராஜபக்ச
07. யதாமினி குணவர்தன

ஐக்கிய மக்கள் சக்தி

01. சமிந்த விஜேசிறி
02. கயந்த கருணாதிலக
03. ஹேஷா விதானகே
04 லக்ஷ்மன் கிரியெல்ல

Facebook Comments