தகவல் அறியும் ஆணைக்குழு பரிந்துரைகளுக்கு அழைப்பு விடுக்கிறது

0
Ivory Agency Sri Lanka

இலங்கையின் தகவல் அறியும் ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் எதிர்கால வெற்றிடங்களுக்கான நியமனங்களை கோர நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

இலங்கையின் பொது மக்களின் உரிமைகளுக்கான மைல்கல்லாகக் கருதப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI), ஓகஸ்ட் 4, 2016 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட முதலாவது தலைவரான மஹிந்த கம்மன்பில மற்றும் சட்டத்தரணிகளான கிஷாலி பின்டோ-ஜயவர்தன மற்றும் எஸ்.ஜி புஞ்சிஹேவா ஆகியோர் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் பதவி விலக உள்ளனர்.

முன்னாள் நீதிபதிகளான ரோஹினி வல்கம மற்றும் பேராசிரியர் செல்வி திருச்சந்திரன் ஆகியோர் முன்னதாக தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கமைய, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பதிப்பாளர் சங்கங்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புகளிலிருந்து பரிந்துரைகளை கோர நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் இணையவழி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், தகவல் அறியும் ஆணைக்குழு 5,000ற்கும் மேற்பட்ட தகவல்களுக்கான கோரிக்கைகளை ஆய்வு செய்துள்ளது.

வார இறுதி மற்றும் வார நாட்களில் மூன்று மொழிகளில் செய்தித்தாள் விளம்பரங்களை வெளியிடவும், அத்தகைய பரிந்துரைகளை சமர்ப்பிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கவும் பொதுச்சபை தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Facebook Comments