தொல்லியல்துறை வடக்கு-கிழக்கு நிலங்களை கொள்ளையடிப்பதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்

0
Ivory Agency Sri Lanka

வடக்கு, கிழக்கில் தமிழர்களின் தனியார் காணிகளை தொல்பொருள் திணைக்களம் கைப்பற்றுவது யுத்தம் முடிவடைந்த பின்னர் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை என ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

அந்தக் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி தொல்பொருள் திணைக்களத் தலைவருக்கு உத்தரவிட்ட நான்கு நாட்களின் பின்னர் பேராசிரியர் அனுர மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட பெரும்பாலான காணிகளில் இராணுவம், சிங்கள பௌத்த பிக்குகள், உயரடுக்கு தரப்பினர் மற்றும் அமைப்புகள் பாதுகாப்பு என்ற பெயரில் பௌத்த விகாரைகளை கட்டியுள்ளனர்.

காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் ஜூன் 8ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காணி தொடர்பான அரச கொள்கைகளை அமுல்படுத்துமாறு பேராசிரியருக்கு கடுமையாக உத்தரவிட்டிருந்தார்.

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குளத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளின் விளைநிலங்கள் உட்பட 229 ஏக்கர் காணிகளை அளவீடு செய்ய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க உத்தரவிட்டுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

அந்த வயல் நிலங்களில் தமிழ் மக்கள் குறைந்தது 100 வருடங்களாக விவசாயம் செய்து வருவதாக எம். ஏ. சுமந்திரன் எம்.பியும் உறுதிப்படுத்தினார்.

தான் வழங்கிய உத்தரவை மீளப்பெறுவது ‘பிரச்சினை’ என தொல்லியல் துறை தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

“ஐயா, ஒரு சின்ன பிரச்சினை, கடிதத்தை மீளப்பெறுவது எனக்கு மிகவும் கடினம்” என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூற, அமைச்சரவை கொள்கைகளை நடைமுறைப்படுத்துமாறு பேராசிரியரை எச்சரித்த ஜனாதிபதி, அவரிடம் எவ்வளவு நிலம் தேவைப்படுகிறது எனக் கேட்டார்.

“சேர், இப்போ 72 ஏக்கர் இருக்கிறது. இன்னும் 270 கேட்டிருக்கோம் சேர். ஐந்து ஏக்கர் நிலம்தான் மக்கள் பயிரிடும் இடமாக காணப்படுகிறது. அந்த நிலம் வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு உட்பட்டது.”

அங்கு, மகா விகாரையை விட அதிக நிலம் ஏன் தேவை என ஜனாதிபதி கேட்டார்.

“அப்படியானால், நீங்கள் 275 ஏக்கர் எடுத்தால், இது மகாவிகாரை, இது மகா விகாரையை விட பெரியது. மகா விகாரை, ஜேதவனாராமய மற்றும் அபயகிரிக் கூட 100 ஏக்கர் இல்லை.”

குறித்த உத்தரவை இரத்து செய்வதாக முன்னர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என பணிப்பாளர் நாயகம் தற்போது கூறுவது பிரச்சினையாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூற்றுப்படி முலத்தீவு குருந்தூர்மலையில் தண்ணிமுறிப்பில் கடந்த காலங்களில் தமிழ் பௌத்த விகாரை ஒன்று இருந்தது.

தொல்லியல் இடமாக இதனைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, ‘வகுப்பு நடத்தி’ வரலாற்றைக் கற்பிக்கவும் முன்வந்தார்.

சிவன் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் புதிய கட்டுமானம் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்ற உத்தரவு இருந்தும், சிங்கள பௌத்த வழிபாட்டுத் தலமாக மாற்றும் இராணுவ அனுசரணை வேலைத்திட்டத்தை நிறுத்தக் கோரி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தலைமையில் உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தியபோதிலும், அரசாங்கம் உட்பட தென்னிலங்கைப் படைகளால் அது புறக்கணிக்கப்பட்டது.

விக்ரமசிங்க அரசாங்கத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகப் பதவி வகிக்கும் விதுர விக்கிரமநாயக்க, இராணுவத்தினரை அழைத்துச் சென்று அங்கு புதிய பௌத்த விகாரையைக் கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டார்.

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்ய, உள்ளூர் மற்றும் சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வினால் நியமிக்கப்பட்ட தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தலைமையிலான ஜனாதிபதி செயலணியின், வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களினதும் மற்றும் தமன்கடுவ பிரதேசத்தின் பிரதம சங்கநாயக்க அரிசிமலே ஆரணியத்தின் சேனாசனாதிபதி பனாமுரே திலகவங்க நாயக்க தேரர், கிழக்கு மாகாணத்தில் 3000 ஏக்கர் நிலத்தை தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் பலவந்தமாக ஆக்கிரமித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்யம் சாணக்கியன் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.

காணிகளை அபகரித்து தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக விதித்துள்ள தடைகளை நீக்குமாறு ஜனாதிபதி கூறியதுடன், “நான் சொன்னதால் கற்கள் அகற்றப்படுமா, அல்லது நான் அதனை செய்ய வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார்.

“ஐயா, நான் செய்கிறேன்,” என பேராசிரியர் மனதுங்க தாழ்ந்த குரலில் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பிரதேசங்களில் புதிய நிர்மாணங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தொல்பொருள் திணைக்களம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உறுதியளித்திருந்தது.

தொல்பொருள் திணைக்களத்திற்கு மேலதிகமாக, பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அதிகார சபை, சுற்றுலா சபை, வன பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன வடக்கு கிழக்கில் தமிழர்களின் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்துவதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

தொல்பொருள் திணைக்களத்தின் காணி கொள்ளை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தும் காணொளி கீழே.

Facebook Comments