போரில் இறந்தவர்களை நினைவுகூற செல்லும் தமிழ் மக்களுக்கு இடையூறு (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளின் அதிக எண்ணிக்கையிலானோர் புதைக்கப்பட்ட புதைகுழியை
மாவீரர் தினத்தைக் நினைவுக்கூறத் தயாராகும் வன்னித் தமிழ் மக்கள் இராணுவத்தின் புலனாய்வுப் பார்வையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு விஸ்வமடுவில் அமைந்துள்ள தேராவில் புதைகுழி, நவம்பர் 27ஆம் திகதி அனுசரிக்கப்படும் தமிழ் மாவீரர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 30ஆம் சுத்தப்படுத்தப்பட்டதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்ட 7,000 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் புதைக்கப்பட்ட தேராவில் மயானத்தில் தமது குடும்ப உறுப்பினர்களும் கிராம மக்களும் ஒன்று திரண்டு அப்பகுதியில் பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் மயானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக மேலும் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக பூஜைகளை நடத்திய பின்னர், மயானத்தை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அப்போது, இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில், சிரமதானத்தில் ஈடுபட்டவர்களை படம்பிடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மயானத்தின் 75 சதவீதத்திற்கும் மேல் இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் புதைக்கப்பட்ட மயானத்தில் இராணுவத்தினர் கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்டம் விளையாடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள உறவினர்கள் தேராவில் புதைகுழிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கோருகின்றனர்.

Facebook Comments